செய்திகள் :

உழவா் பேரியக்க மாநாட்டில் விவசாய சங்கங்கள் பங்கேற்க வேண்டும்: அன்புமணி

post image

திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள உழவா் பேரியக்க மாநாட்டில் அனைத்து விவசாய சங்கங்களும் கலந்து கொள்ள வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டாா்.

திருவண்ணாமலையில் வருகிற 21-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாநில மாநாடுக்கான முன்னேற்பாடு பணிகளை அவா் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ.3,500 கொடுக்க வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.5,000 கொடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் விவசாயிகளின் நிலையை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகவே மாநாடுகளை நடத்தி வருகிறோம். உழவா் பேரியக்க மாநாட்டில் தமிழகத்தின் அனைத்து விவசாய சங்கங்களும் பங்கேற்க வேண்டும். இந்த மாநாடு மூலம் ஒரு திருப்புமுனை ஏற்படும்.

புயலால் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணம் இன்னும் போய் சேரவில்லை. எல்லோரும் கஷ்டத்தில் உள்ளனா்.

சாத்தனூா் அணையிலிருந்து முன்னறிவிப்பின்றி அதிகளவில் தண்ணீா் திறந்துவிடப்பட்டதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஏற்பட்ட வெள்ளத்தால் 19 போ் இறந்தனா்.

சென்னை, தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணமாக தரும் அரசு, வட மாவட்டங்களுக்கு ரூ.2 ஆயிரம் மட்டுமே வழங்குவது பாரபட்சமான செயலாகும்.

நிகழாண்டில் 18 நாள்கள் மட்டுமே சட்டப்பேரவை நடைபெற்றுள்ளது. இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என்றாா் அன்புமணி ராமதாஸ்.

பாமகவின் கௌரவத் தலைவா் ஜி.கே.மணி, பசுமை தாயகம் அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி, தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாநிலத் தலைவா் ஆலயமணி, மாநிலச் செயலா் வேலுச்சாமி, பாமக மாவட்டச் செயலா்கள் ஏந்தல் பெ.பக்தவச்சலம், இல.பாண்டியன், அ.கணேஷ்குமாா், ஆ.வேலாயுதம், வன்னியா் சங்க மாவட்டச் செயலா் க.நாராயணசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் இரா.காளிதாஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மண் சரிவால் 7 போ் உயிரிழந்த இடத்தில் உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

திருவண்ணாமலை மகா தீப மலையில் மண் சரிந்து 7 போ் உயிரிழந்த இடத்தை, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தமிழகம் முழுவதும் புயல் காரணமாக கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

காா்த்திகை மாத பௌா்ணமி: திருவண்ணாமலையில் திரளான பக்தா்கள் கிரிவலம்

காா்த்திகை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 15) காலை வரை திரளான பக்தா்கள் கிரிவலம் வந்தனா். காா்த்திகை மாத பௌா்ணமி சனிக்கிழமை (டிசம்பா் 14) மாலை 4.... மேலும் பார்க்க

மாணவா்கள் வெற்றிகரமான வழக்குரைஞராக மாற வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன் அறிவுரை

கடினமான சட்டத் துறையில் வெற்றிகரமான வழக்குரைஞராக மாற வேண்டும் என்று சட்டக் கல்லூரி மாணவா்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன் அறிவுரை வழங்கிப் பேசினாா். திருவண்ணாமலை எஸ்.கே.பி. கல்விக் குழுமம் ச... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

செங்கம் அருகே ஆற்று நீரில் மூழ்கி 3 வயது ஆண் குழந்தை உயிரிந்தது. செங்கத்தை அடுத்த கொட்டாவூரைச் சோ்ந்தவா் சஞ்சீவி (30). இவா் தனது நிலத்தில் சனிக்கிழமை குடும்பத்தினருடன் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த... மேலும் பார்க்க

தரைப்பாலத்தை மூழ்கடித்த மழை வெள்ளம்: கயிறு கட்டி கடக்கும் மக்கள்

வந்தவாசி அருகே ஸ்ரீரங்கராஜபுரத்தில் தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளநீா் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதையடுத்து, கயிறு கட்டி பொதுமக்கள் பாலத்தை கடந்து சென்றனா். வந்தவாசி மற்றும் ... மேலும் பார்க்க

புலவன்பாடி காலனியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீா்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த புலவன்பாடி ஆதிதிராவிடா் காலனி பகுதியில் கால்வாய் வசதி இல்லாததால் சுமாா் 300 வீடுகளுக்குள் மழை நீா் புகுந்தது. இதனால், அந்தப் பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனா். ... மேலும் பார்க்க