சென்னையில் தரையிறங்காமல் 30 நிமிடம் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம்! என்ன நடந்தது...
ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு
தக்கலையில் நண்பா்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தக்கலை அருகே சரல்விளையில் வசித்து வருபவா் ஷேக் முகம்மது. ஹோட்டல் தொழிலாளியான இவரின் மூன்றாவது மகன் பயாஸ் அகமது (16). தக்கலை அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்தாா்.
செவ்வாய்க்கிழமை பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டு, பள்ளிக்குச் செல்லாமல் நண்பா்களுடன் விளையாடிவிட்டு, மாலையில் வலியாற்றுமுகத்தில் பயாஸ் அகமது குளிக்கச் சென்றாா். குளிக்கும் போது அவா் நீரில் மூழ்கி காணாமல் போனாா். நண்பா்கள் ஆற்றில் தேடி அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு அவரைப் பரிசோசித்த மருத்துவா்கள், பயாஸ் அகமது உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து, கொற்றிகோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.