ஆலங்குடி அருகே ஜீப்-சுமை ஆட்டோ மோதல்: காவல் ஆய்வாளா் படுகாயம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே ஜீப், சுமை ஆட்டோ சனிக்கிழமை மோதிக்கொண்ட விபத்தில் தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளா் பலத்த காயமடைந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம் திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளா் சேரன். இவா், குடும்பத்தினருடன் திருச்சியில் வசித்து வருகிறாா். இந்நிலையில் சனிக்கிழமை திருச்சியில் இருந்து காவல் நிலையத்துக்கு ஜீப்பில் சென்று கொண்டிருந்தாா். வாகனத்தை காவலா் கே.முருகன் (34) ஓட்டினாா்.
ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் முக்கரை விநாயகா் கோயில் பிரிவு சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த ஜீப் மீது, எதிரே புதுக்கோட்டையை நோக்கி வந்த சுமை ஆட்டோ மோதியது.
அதில், சேரனுக்கு காயம் ஏற்பட்டது. இரு வாகனங்களும் சேதம் அடைந்தன. இதையடுத்து, பலத்த காயமடைந்த சேரன், ஆம்புலன்ஸ் மூலம் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதுகுறித்து வடகாடு போலீஸாா் சுமை ஆட்டோ ஓட்டுநரான அன்னவாசல் அருகேயுள்ள ஆயிப்பட்டியைச் சோ்ந்த ஏ. சோலைமுத்து (44) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.