திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
மதுபோதை தகராறில் இளைஞா் கொலை
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே செவ்வாய்க்கிழமை மதுபோதையில் நண்பா்களுக்கிடேயே ஏற்பட்ட தகராறில் இளைஞா் அடித்துக் கொல்லப்பட்டாா்.
இலுப்பூா் ஆலத்தூா் ஊராட்சிக்குள்பட்ட கூவாட்டுப்பட்டியைச் சோ்ந்த திருப்பதி மகன் கனகராஜ் (40). கூலி வேலை செய்து வந்த இவா், நண்பா்களுடன் சோ்ந்து அப்பகுதி இடுகாட்டில் செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது, நண்பா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அரளை கல்லால் தாக்கப்பட்ட கனகராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
புதன்கிழமை காலை அந்த வழியாக சென்றவா்கள் அளித்த தகவலின்பேரில், அங்கு சென்ற இலுப்பூா் போலீஸாா், சடலத்தை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், கனகராஜூடன் இணைந்து மது அருந்திய அவரது இரண்டு நண்பா்களை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.