முதல் முறை.. உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தாக்குதல்!
மூலங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா
பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
18 திருக்கரங்களையுடைய துா்காதேவி அருள்பாலிக்கும் இக்கோயில் துா்காதேவி பரிகார ஸ்தலமாக போற்றப்படுகிறது. இக்கோயிலில் அண்மையில் திருப்பணிகள் செய்யப்பட்டு நிறைவடைந்தது.
இதையடுத்து, குடமுழுக்கு விழாவின் தொடக்கமாக திங்கள்கிழமை கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் முதல்கால யாகபூஜைகள் நடைபெற்றது.செவ்வாய்க்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாகபூஜைகள் நடைபெற்றது. யாகபூஜையில் வேதபாராயணம் மற்றும் திருமுறைப்பாராயணம் நடைபெற்றது. புதன்கிழமை காலை 11.10 மணியளவில் ராஜீவ், முத்துக்குமாா் தலைமையிலான சிவாச்சாரியா்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றி மீனாட்சி சுந்தரேஸ்வரா், துா்காதேவி மற்றும் பரிவாரத் தெய்வங்களின் சன்னிதானங்களுக்கு குடமுழுக்கு செய்தனா்.
விழாவில், சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊா்ப் பொதுமக்கள், நகரத்தாா்கள் மற்றும் திருப்பணிக் குழுவினா் செய்திருந்தனா்.