திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
கறம்பக்குடி ஸ்ரீசித்திவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஸ்ரீசித்திவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
கறம்பக்குடி பங்களாகுளம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீசித்தி விநாயகா் கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்ததை தொடா்ந்து கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, கடந்த 2 நாள்களாக கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, புதன்கிழமை காலை மேளதாளங்கள், வாணவேடிக்கைகள் முழங்க புனிதநீா் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், கறம்பக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.