செய்திகள் :

இசிஜி சோதனை நடத்திய துப்புரவுப் பணியாளர்: மும்பையில் அதிர்ச்சி!

post image

மும்பையில் நோயாளி ஒருவருக்கு துப்புரவுப் பணியாளர் இசிஜி சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் கோவந்தி பகுதியிலுள்ள சதாப்தி மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு துப்புரவுப் பணியாளர் இதய சிகிச்சைக்கு செய்யப்படும் இசிஜி சோதனை மேற்கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. முறையான பயிற்சி எதுவுமில்லாத நிலையில் மருத்துவரின் ஆலோசனைப்படி அவர் தொடர்ந்து இந்த சோதனையை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான விடியோ வைரலானதைத் தொடர்ந்து வழக்கறிஞர் அபித் அப்பாஸ் சையது என்பவர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாநில சுகாதார அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதையும் படிக்க | ஐடி வளாகத்தில் உலவும் சிறுத்தை: ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய உத்தரவு!

இந்த சம்பவத்தில் மருத்துவ நெறிமுறைகளை மீறப்பட்டதாகவும் மருத்துவமனை ஊழியர்கள் பொறுப்பின்றி நடந்துகொண்டதாகவும் வழக்கறிஞர் அப்பாஸ் தெரிவித்தார்.

மேலும், ஒரு பெண் நோயாளிக்கு சீருடை அணிந்த ஆண் துப்புரவுப் பணியாளர் ஒருவர், தகுதியான மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே செய்யப்பட வேண்டிய சோதனையை அனுமதியின்றி செய்ததாகக் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இந்த நிலையில், சோதனை நடத்திய நபர் பயிற்சி பெற்றவர் என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த மருத்துவமனையில் 35% சதவீத பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், மருத்துவத் துறை இதை கவனத்தில் கொண்டு பணியாளர்களை நியமிக்கவேண்டும் என்று அங்குள்ள மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கர்நாடகத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

கர்நாடகத்தில் அரசுப் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து பாஜகவினர் இன்று (ஜன. 3) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தில் அரசுப் பேருந்து கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த கர்நாடக அமைச்சரவை வியாழக்கிழமை மு... மேலும் பார்க்க

மணிப்பூர் ஆளுநராக அஜய் குமார் பதவியேற்பு!

மணிப்பூரின் 19-வது ஆளுநராக மத்திய உள்துறை முன்னாள் செயலர் அஜய் குமார் பல்லா வெள்ளிக்கிழமை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பதவியேற்றார்.அஜய் குமார் பல்லாவுக்கு மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபத... மேலும் பார்க்க

மோசமான வானிலை: தில்லியில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்!

மோசமான வானிலை காரணமாக தில்லி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தேசிய தலைநகரில் அடர்த்தியான மூடுபனி நிலவி வருகின்றது. இதன் க... மேலும் பார்க்க

ஒடிசா ஆளுநராக ஹரிபாபு கம்பம்பட்டி பதவியேற்பு!

ஒடிசாவின் 27-வது ஆளுநராக ஹரிபாபு கம்பம்பட்டி வெள்ளிக்கிழமை ஆளுநர் மாளிகையில நடந்த நிகழ்ச்சியில் பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மோகன் சரண் மாஜி, எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்,... மேலும் பார்க்க

காப்பீட்டுத் தொகை கோரிய மூன்றில் ஒருவருக்கு பணம் நிலுவை!

2024 நிதியாண்டில் மருத்துவக் காப்பீட்டுத் தொகை கோரியவர்களில் மூன்றில் ஒருவருக்கு இன்னும் பணம் செலுத்தாமல் நிலுவையில் இருப்பதாக இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.காப்பீட்ட... மேலும் பார்க்க

அதானி வழக்கு: விசாரணையை வேகப்படுத்த அமெரிக்க நீதிமன்றம் புதிய உத்தரவு!

அதானி லஞ்ச புகார் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிபதி அமர்வு விசாரணை நடத்துவதற்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்ப... மேலும் பார்க்க