ஃபாஸ்டேக் கொண்டு வந்திருக்கும் புதிய கெடுபிடி! பயனர்களே எச்சரிக்கை!!
இதயம் முரளி படத்தைப் பாராட்டிய ரவி மோகன்!
நடிகர் அதர்வா நடித்துள்ள இதயம் முரளி படத்தின் போஸ்டரை ரவி மோகன் பாராட்டியுள்ளார்.
தமிழ்த் திரையுலகின் கவனம் பெற்ற ஒருவராக நடிகர் அதர்வா முரளி இருந்து வருகிறார். தனது தந்தையின் பட்டப் பெயரான ‘இதயம் முரளி’ என்ற படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியாகியது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-14/bevlwo5o/Gjuxs3xWEAANM9i.jpeg)
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கவிருக்கிறார்.
இதைப் பகிர்ந்த ரவி மோகன், “அழகான தலைப்பு. அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன், நடிகர் அதர்வா முரளிக்கும் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.
பல்வேறு மாறுபட்ட கதைக்களங்களில் நடித்து வரும் அதர்வா 'பட்டத்து அரசன்' திரைப்படத்திற்குப் பிறகு தற்போது புதுமுக இயக்குநருடன் இணைந்ததாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
தணல் எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்க, அன்னை ஃபிலிம் புரொடக்சன், எம். ஜான் பீட்டர் தயாரிக்கிறார்.
நடிகர் ரவி மோகன் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக வெளியான காதலிக்க நேரமில்லை படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.