செய்திகள் :

ரேகாசித்திரம் ஓடிடி ரிலீஸ் தேதி!

post image

நடிகர் ஆசிஃப் அலியின் ரேகா சித்திரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஜோபின் டி சாக்கோ இயக்கத்தில் நடிகர் ஆசிஃப் அலி நடித்த ரேகா சித்திரம் திரைப்படம், ஜனவரி 9-ல் வெளியானது. கிஷ்கிந்தா காண்டம் படத்துக்கு அடுத்ததாக ஆசிஃப் அலி நடித்த த்ரில்லர் படமாக இது அமைந்தது.

ஒரு பெண்ணின் மரணம் குறித்த மர்மத்தை பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் அதிகாரி ஒருவர் கண்டுபிடிப்பதை மையமாகக் கொண்டு, இந்தப் படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்தப் படத்தில் அனஸ்வரா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதுடன், இந்திரன்ஸ், நிஷாந்த் சாகர், ஜரின் ஷிஹாப், சித்திக் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

அண்மை காலமாக ஆசிஃப் அலியின் திரைப்படத் தேர்வுகள் ஆச்சரியம் அளித்து வந்த நிலையில், ரேகா சித்திரம் படம் பரவலான கவனத்தைப் பெற்றதுடன் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் சோனி லைவ் ஓடிடியில் மார்ச்.14ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடங்கியது சிபிஎஸ்இ தேர்வுகள் - புகைப்படங்கள்

நாடு முழுவதும் 8,000 பள்ளிகளைச் சேர்ந்த 44 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர்.2025 ஆம் ஆண்டிற்கான சிபிஎஸ்இ வாரியத் தேர்வுகள் இந்தியா முழுவதும் 7,842 மையங்களில் நடைபெற்றது.விதிமீறல்களில் ஈடுபடும் மா... மேலும் பார்க்க

காதலர் தினம் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

காதலர்கள் பூங்கொத்து, ரோஜாப்பூ, வாழ்த்து அட்டை, சாக்லேட் உள்ளிட்ட விதவிதமான பரிசு பொருட்களை கொடுத்து அன்பை பரிமாறிக்கொண்டனர்.காதலர் தினத்தன்று பூங்கொத்து மற்றும் பலூன்களை வைத்திருக்கும் இளம் பெண்.மும்... மேலும் பார்க்க

கிங்ஸ்டன் படத்தின் ’மண்ட பத்திரம்’ பாடல் வெளியானது!

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள கிங்ஸ்டன் படத்தின் இரண்டாவது பாடலான ’மண்ட பத்திரம்’ வெளியாகியுள்ளது.ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்... மேலும் பார்க்க

'காதல்', 'கவிதை': சினேகன் குழந்தைகளுக்கு கமல் சூட்டிய பெயர்!

பாடாலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா தம்பதியினருக்கு அண்மையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்த நிலையில், அவர்களுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பெயர் சூட்டியுள்ளார்.தமிழ் சி... மேலும் பார்க்க

திருமண தேதியை அறிவித்த அமீர் - பாவ்னி ஜோடி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான அமீர் - பாவ்னி ஜோடி தங்களது திருமண தேதியை அறிவித்துள்ளனர்.சின்னதிரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவ்னி. இவர் பிரஜுனுடன் நடித்த சின்ன தம்பி தொடர் ரசி... மேலும் பார்க்க