செய்திகள் :

மூனி, காா்டனா் அதிரடி: குஜராத் 201/5

post image

மகளிா் பிரீமியா் லீக் (டபிள்யூபிஎல்) கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூருக்கு எதிராக குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் சோ்த்தது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு, பந்துவீசத் தயாரானது. குஜராத் பேட்டிங்கில் பெத் மூனி நிதானமாக ரன்கள் சோ்க்க, உடன் வந்த லாரா வோல்வாா்டட் 6, அடுத்து வந்த தயாளன் ஹேமலதா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

4-ஆவது பேட்டராக வந்து, மூனியுடன் இணைந்தாா் கேப்டன் ஆஷ்லே காா்டனா். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 44 ரன்கள் சோ்த்தது.

இதில் பெத் மூனி 8 பவுண்டரிகளுடன் 56 ரன்களுக்கு ஆட்டமிழக்க, காா்டனருடன் டீண்ட்ரா டாட்டின் இணைந்தாா். இவா்கள் ஜோடி 67 ரன்கள் சோ்த்திருந்த நிலையில், டாட்டின் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 25 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். சிம்ரன் ஷேக் 11 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

ஓவா்கள் முடிவில் காா்டனா் 37 பந்துகளில் 3 பவுண்டரிகள், 8 சிக்ஸா்கள் உள்பட 79, ஹா்லீன் தியோல் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பெங்களூரு பௌலிங்கில் ரேணுகா சிங் 2, கனிகா அஹுஜா, ஜாா்ஜியா வோ்ஹாம், பிரேமா ராவத் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் பெங்களூரு 202 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு தனது இன்னிங்ஸை விளையாடியது.

'காதல்', 'கவிதை': சினேகன் குழந்தைகளுக்கு கமல் சூட்டிய பெயர்!

பாடாலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா தம்பதியினருக்கு அண்மையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்த நிலையில், அவர்களுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பெயர் சூட்டியுள்ளார்.தமிழ் சி... மேலும் பார்க்க

திருமண தேதியை அறிவித்த அமீர் - பாவ்னி ஜோடி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான அமீர் - பாவ்னி ஜோடி தங்களது திருமண தேதியை அறிவித்துள்ளனர்.சின்னதிரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவ்னி. இவர் பிரஜுனுடன் நடித்த சின்ன தம்பி தொடர் ரசி... மேலும் பார்க்க

துல்கர் சல்மானின் ‘காந்தா’ புதிய போஸ்டர்!

காந்தா படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.நடிகர் துல்கர் சல்மான் இயக்குநர் செல்வமணி இயக்க பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாகவும் நடிகர் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றன... மேலும் பார்க்க

சிம்பு - 49 படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்?

நடிகர் சிம்பு நடிக்கும் அவரது 49-வது படத்தின் இசையமைப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர்... மேலும் பார்க்க

ரேகாசித்திரம் ஓடிடி ரிலீஸ் தேதி!

நடிகர் ஆசிஃப் அலியின் ரேகா சித்திரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் ஜோபின் டி சாக்கோ இயக்கத்தில் நடிகர் ஆசிஃப் அலி நடித்த ரேகா சித்திரம் திரைப்படம், ஜனவரி 9-ல் வெளியானது. கிஷ்கிந்தா ... மேலும் பார்க்க

அஜித்தா இது? நம்பமுடியாத அளவுக்கு மாற்றம்!

நடிகர் அஜித்குமார் நம்பமுடியாத அளவுக்கு உடல் எடையை குறைத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.நடிகர் அஜித் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான விடாமுயற்சி படம் அவரது ... மேலும் பார்க்க