’ஹாஹா வாவ்’: கை, கால்களில் விலங்கு! விடியோவுக்கு மஸ்க் ரியாக்ஷன்!
"இந்திய அணியில் சூப்பர் ஸ்டார் கலாசாரத்தை நாம் ஊக்குவிக்கக் கூடாது; நாங்கள் வெறும்.."- அஸ்வின் பளீச்
கிரிக்கெட் என்னதான் குழு ஆட்டமாக இருந்தாலும், 11 பேரும் ஒத்துழைத்தால்தான் வெற்றி நிச்சயம் என்றாலும் தனிமனித துதிபாடலே அதிகமாக இருக்கிறது. அதுவும், கிரிக்கெட் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு பெரும் வணிகமாக்கப்பட்ட இந்தியாவில் இந்த சூப்பர் ஸ்டார் கலாசாரம் உச்சம்.

உச்சத்தில் வைத்து கொண்டாடப்படும் வீரர் மோசமாக சொதப்பினாலும் கூட அணியிலிருந்து நீக்க முடியாத அளவுக்கு செலக்சன் கமிட்டி வரை வணிகத்தோடு அது பரவியிருக்கிறது. இந்த நிலையில், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற இந்தியாவின் தலைசிறந்த ஸ்பின்னர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டார் கலாசாரத்தை ஊக்குவிக்கக் கூடாது என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

தனது இந்தி யூடியூப் சேனலில் இது குறித்து பேசியிருக்கும் அஸ்வின், ``இந்திய கிரிக்கெட்டில் இது போன்ற விஷயங்களை முதலில் சாதாரண நிலைக்கு கொண்டு வரவேண்டும். இந்திய அணியில் சூப்பர் ஸ்டார் வழக்கத்தை, பிரபலங்களை நாம் ஊக்குவிக்கக் கூடாது. நாங்கள் கிரிக்கெட் வீரர்கள் தானே தவிர, நடிகர்களோ சூப்பர் ஸ்டார்களோ அல்ல. நாம் விளையாட்டு வீரர்கள். சாதாரண மக்களை பிரதிபலிப்பவராக இருக்க வேண்டும். அவர்கள் நம்மைத் தங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடியவராக இருக்க நாம் வேண்டும்." என்று கூறினார்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play