சேலம்: விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை; வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்... அல்லல்பட...
இந்திய சேனல்களை தடை செய்ய வங்கதேச நீதிமன்றத்தில் மனு!
டாக்கா: வங்கதேசத்தில் ஒளிப்பரப்பாகும் இந்திய தொலைக்காட்சி சேனல்களை தடை செய்ய வேண்டுமென்று அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞரான இக்லாஸ் உத்தின் புயான் என்பவர் தாக்கல் செய்த மனுவில், அந்நாட்டில் செயல்படும் இந்திய தொலைக்காட்சி சேனல்களால் வங்கதேசத்தின் சமுதாயத்திலும் கலாச்சாரத்திலும் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் இதனால் அந்நாட்டிற்குள் இந்திய சேனல்களை ஒளிப்பரப்ப தடைச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு!
இந்த வழக்கு வங்கதேச உயர் நீதிமன்ற நீதிபதி பாத்திமா நஜீப் மற்றும் நீதிபதி சிக்தர் மஹ்முதுர் ராஜி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வர இருக்கின்றது.
அந்த மனுவில் அங்கு செயல்படும் இந்திய சேனல்களில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகள் அந்நாட்டின் கலாச்சாரத்திற்கு எதிரானதாக இருப்பதாகவும் இதனால் அந்நாட்டின் இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அவை வெளியிடும் செய்திகள் வன்முறையை தூண்டும் விதத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், இந்தியாவை சார்ந்த பிரபல முன்னணி சேனல்களோடு சேர்த்து அனைத்து இந்திய சேனல்களும் தடை செய்யப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.