இந்திய ரிசர்வ் வங்கியிடம் 879 டன் தங்கம் கையிருப்பு - இந்திய வீடுகளில் எவ்வளவு இருக்கிறது? | Gold

இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி விலையில் கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் (22K) தங்கம் விலை ரூ.8,755 ஆக விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு பவுன் (22K) தங்கத்தின் விலை ரூ.70,200 ஆகும்.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.108 ஆக விற்பனை ஆகி வருகிறது.
இந்தியாவில் எத்தனை தங்கம் உள்ளது?

தங்கம் கையிருப்பு பட்டியலில், 2015-ம் ஆண்டு, இந்தியா பத்தாவது இடத்தை பிடித்திருந்தது.
இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து தங்கம் வாங்கி குவிப்பதால், 2025-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, தங்கம் கையிருப்பு பட்டியலில் ஏழாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
சமீபத்தில் வெளியாகி உள்ள தகவலின் படி,
இந்திய வீடுகளில் 2.3 டிரில்லியன் மதிப்புள்ள 25,000 டன் தங்கம் உள்ளது.
கோவில்களில் 276 - 368 பில்லியன் டாலர் மதிப்புள்ள 3,000 - 4,000 டன் தங்கம் உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியிடம் 66 பில்லியன் டாலர் மதிப்புள்ள 879 டன் தங்கம் உள்ளது.
'அம்மாடியோவ்...' என்று ஆச்சரியமாக இருக்கிறதா? உங்கள் வீட்டில் எத்தனை தங்கம் உள்ளது என்று சும்மா கமென்ட் பண்ணுங்களேன்!