இந்தியாவில் இணையசேவை! ஒப்புதல் பெற்ற ஸ்டார்லிங்க்!
இந்தியாவில் சேவையைத் தொடங்க ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், 7,000-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களின் தொகுப்பு மூலம் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு செயற்கைக்கோள் சேவைகளை வழங்குகிறது.
இந்த நிறுவனம், இந்தியாவிலும் தனது சேவையைத் தொடங்க 2 ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சித்து வந்தது. இந்த நிலையில், இந்தியாவில் சேவையைத் தொடங்குவதற்கான கோரிக்கைக்கு தொலைத்தொடர்புத் துறை ஒப்புதல் அளித்தது.
இருப்பினும், இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் இறுதி அங்கீகாரம் தேவைப்படுகிறது. இந்த இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டால், இந்தியாவிலும் ஸ்டார்லிங்க் சேவை தொடங்கி விடும்.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸுக்கு சொந்தமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள், சர்வதேச அளவில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் செயற்கைக்கோள் மூலம் உலகம் முழுவதுமுள்ள கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கு அதிவேக இணைய சேவையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்துடன் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.