ஹஜ் யாத்திரை: தனியார் நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் ஒதுக்க சவூதி ஒப்புதல்- மத்த...
இனி, மெரினாவுக்குச் செல்ல கட்டணமா?
மெரினா கடற்கரைக்குச் செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என்று வதந்திகள் பரவிய நிலையில், இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
மெரினா கடற்கரையில் அண்ணா நீச்சல் குளம் அருகே உள்ள 50 ஏக்கரில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது, விரைவில் நீலக் கொடி மண்டலமாக அப்பகுதி மாறவுள்ளது.
மக்கள் அதிக அளவில் கூடும் புகழ்பெற்ற இடங்களுக்கு சுற்றுச்சூழல் அங்கீகாரமான (புளூ லேபிள்) நீலக் கொடி வழங்கப்படும். மே மாத இறுதிக்குள் உலகளாவிய சுற்றுச்சூழல் நீலக் கொடி சான்றிதழ் மெரினாவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாய்ந்த இருக்கைகள், சிற்றுண்டிச்சாலை, வெளிப்புற ஜிம்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்பு, நவீன நடக்கும் பாதைகள் ஆகியவை ரூ. 6 கோடி நிதியுதவியுடன் அமையவுள்ளன.
இதனால் கடற்கரைக்குச் செல்ல இனி கட்டணம் வசூலிக்கப்படும் என செய்திகள் வெளியாகின. இதனிடையே இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பேசியதாவது,
’’மெரினா நீலக் கொடி கடற்கரை திட்டத்தில் கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான தகவல் தவறானது. மெரினா கடற்கரையை இயற்கையான சூழலில் பொதுமக்கள் பயன்படுத்தவே நீலக் கொடி கடற்கரைத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பராமரிப்புக்காக மக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பரவும் செய்தி உண்மை அல்ல.
கோவளம் கடற்கரை பகுதி ஊராட்சிக்குள் வருவதால் பராமரிப்பு பணிகளுக்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது’’ என விளக்கம் அளித்தார்.
இதையும் படிக்க | ஏப். 17-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!