Starc : 'ராஜஸ்தான் அணியின் முடிவு எனக்கு பெரிய சர்ப்ரைஸ்!' - சூப்பர் ஓவர் `ஸ்டார...
இன்டர் மியாமி அணிக்காக வரலாறு படைத்த மெஸ்ஸி!
இன்டர் மியாமி கால்பந்து அணிக்காக லியோனல் மெஸ்ஸி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஆர்ஜென்டீனா அணி வீரர் லியோனல் மெஸ்ஸி தற்போது இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.
எம்எல்எஸ் கால்பந்து லீக் தொடரில் டோரண்டோ உடனான நேற்றைய (ஏப்.7) போட்டியில் மெஸ்ஸி இரண்டு கோல்கள் அடித்தார். அதில் ஒரு கோல் ஃபவுலினால் மறுக்கப்பட்டது.
பின்னர், முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் 45+5 ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார்.
இரண்டாம் பாதி முழுவதும் இரண்டு அணிகளும் எந்த கோலையும் அடிக்கவில்லை. பின்னர் போட்டி 1-1 என சமநிலையில் முடிந்தது.
இந்தப் போட்டியில் மெஸ்ஸி அடித்த கோல் உடன் மொத்தமாக அவர் இன்டர் மியாமி அணிக்காக 29 போட்டிகளில் விளையாடி 24 கோல்கள், 24 அசிஸ்ட்ஸ் செய்துள்ளார்.

இதன் மூலம் மெஸ்ஸி மொத்தமாக 44 கோல்களில் பங்குபெற்றுள்ளார். இதற்கு முன்பாக இன்டர் மியாமி அணியின் வரலாற்றில் கோன்ஜாலோ ஹிகுயான் 43 கோல்களில் பங்காற்றியிருந்தார்.
மெஸ்ஸி விளையாடியதால் கடந்த எம்எல்எஸ் சீசனில் இன்டர் மியாமி அணி சப்போர்டர்ஸ் ஷீல்டு விருது பெற்றதும் குறிப்பிடத்தக்கது.