Nifty: "Buy & Sell பண்ற Level இது இல்ல, Watch பண்ற Level" | IPS Finance Comment ...
திருவண்ணாமலையில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்
திருவண்ணாமலையில் வியாழக்கிழமை (ஏப்.17) மின் நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை கிழக்கு மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்கள் கலந்து கொண்டு குறைகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவித்து பயனடையலாம் என்று மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் எஸ்.பழனிராஜு தெரிவித்துள்ளாா்.