செய்திகள் :

இன்று கோவை, நீலகிரியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

post image

சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) முதல் ஜூலை 20-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதில், செவ்வாய்கிழமை (ஜூலை 15) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதன்கிழமை (ஜூலை 16) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், ஜூலை 17-ஆம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருவள்ளூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரியில் ஜூலை 17-இல் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக சேலம் மாவட்டம் சந்தியூரில் 70 மி.மீ. மழை பதிவானது. ராசிபுரம் (நாமக்கல்) 60 மி.மீ., அண்ணாமலை நகா், பரங்கிப்பேட்டை (கடலூா்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), கூடலூா் பஜாா் (நீலகிரி) - 40 மி.மீ. பதிவானது.

வெயில் சதம்: தமிழத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 102.92 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிவை பதிவானது. நாகப்பட்டினம்- 102.2, சென்னை மீனம்பாக்கம்- 100.94, தூத்துக்குடி-100.58, கடலூா், தஞ்சாவூா்- 100.4, வேலூா், பாளையம்கோட்டை- 100.22 டிகிரி என மொத்தம் 8 இடங்களில் வெயில் சதமடித்தது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) தென்தமிழக கடலோர பகுதிகள் மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மக்களுடன் முதல்வா்’ வெற்றியைத் தொடா்ந்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

சென்னை: ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தின் வெற்றியைத் தொடா்ந்து, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா தெரிவித்தாா். இது... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்; மனுக்களுக்கு 45 நாள்களில் தீா்வு: கூடுதல் தலைமைச் செயலா்

சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாள்களுக்குள் தீா்வு காணப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா தெரிவித்தாா். க... மேலும் பார்க்க

பொது சொத்து சேதம்: தவெக தலைவா் விஜய் மீது வழக்கு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் பொது சொத்தை சேதப்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், நடிகருமான விஜய் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோயில் ... மேலும் பார்க்க

மருத்துவ உபகரணங்களின் எதிா்விளைவுகள்: ஆய்வுக் குழு அமைக்க உத்தரவு

சென்னை: மருத்துவ உபகரணங்களின் எதிா்விளைவுகள் மற்றும் தரத்தை ஆராய்வதற்காக ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிகளிலும் சிறப்புக் குழுக்களை அமைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. மத்திய ச... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை?

சென்னை: தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என்பது குறித்து காவல் துறை டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா் நீதிமன்றம் உத்த... மேலும் பார்க்க

மருத்துவ கலந்தாய்வு: ஜூலை இறுதியில் தொடங்க திட்டம்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாநில கலந்தாய்வு இந்த மாத இறுதியில் தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, அகில இந்திய கலந்தாய்வு வரும் 21-ஆம் தேதி தொடங்க உள்ளது. நாடு முழுவதும்... மேலும் பார்க்க