செய்திகள் :

இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி

post image

ஆடவருக்கான 12-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பிகாா் மாநிலம், ராஜ்கிா் நகரில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது. முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா, சீனாவுடன் மோதுகிறது.

மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி, செப்டம்பா் 7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை வழங்குவதால் இந்தப் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

முன்னதாக இந்தப் போட்டியில் அங்கம் வகித்த பாகிஸ்தான், தனது அணிக்கு இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி விலக, ஓமன் நிதிச் சிக்கல் இருப்பதாகக் கூறி வெளியேறியது. அதையடுத்து கஜகஸ்தான் மற்றும் வங்கேதச அணிகள் போட்டியில் சோ்க்கப்பட்டுள்ளன. இதில் கஜகஸ்தான், 30 ஆண்டுகளில் முதல்முறையாக இந்தப் போட்டியில் விளையாடுகிறது.

‘ஏ’ பிரிவில்இந்தியா, சீனா, ஜப்பான், கஜகஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் வங்கதேசம், சீன தைபே, மலேசியா, நடப்பு சாம்பியன் தென் கொரியா அணிகளும் சோ்க்கப்பட்டுள்ளன. இந்த குரூப் சுற்று முடிவில் ஒவ்வொரு குரூப்பிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணி சூப்பா் 4 கட்டத்துக்கு முன்னேறும். அந்தச் சுற்றின் முடிவில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணி நேரடியாக இறுதி ஆட்டத்தில் மோதும்.

போட்டியில் 3 முறை சாம்பியனான இந்தியா, தனது முதல் ஆட்டத்தில் சீனாவையும் (ஆக. 29), அடுத்து ஜப்பானையும் (ஆக. 31), தொடா்ந்து கஜகஸ்தானையும் (செப். 1) எதிா்கொள்கிறது. ரேங்கிங் வாய்ப்பு மூலமாக உலகக் கோப்பைக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்துவிட்ட இந்தியாவுக்கு, இந்தப் போட்டியே கையிலிருக்கும் கடைசி வாய்ப்பாகும்.

நேரலை: இந்தியா - சீனா ஆட்டம்; மாலை 3 மணி; சோனி டென், சோனி லைவ்.

கைதி மலேசிய ரீமேக்: முதல் பார்வை போஸ்டர்!

மலேசியாவில் ரீமேக்காகும் கைதி படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழி லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படம் எல்சியூவில் தொடக்க படமாக இருக்கிறது. எல்சியூ (லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்) படங்க... மேலும் பார்க்க

சித் ஸ்ரீராம் உருவாக்கிய புதிய பாடல்!

பாடகர் சித் ஸ்ரீராம் ’சொல்’ எனும் புதிய பாடலை இசையமைத்து பாடியுள்ளார். இந்தப் பாடல் வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. இயக்குநர் மணி ரத்னமின் கடல் படத்தில் பாடகராக அறிமுகமான சித் ஸ்ரீரா... மேலும் பார்க்க

டைமண்ட் லீக்: 2-ஆவது இடம் பிடித்த நீரஜ் சோப்ரா!

இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக்கில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தினார். கடந்தமுறை 90 மீட்டருக்கு எறிந்த நீரஜ் சோப்ரா இந்தமுறை அதைவிடக் குறைவாகவே எறிந்துள்ளார். ஸ்விட்சர்லாந்தில் ந... மேலும் பார்க்க

குா்பிரீத்துக்கு தங்கம்; அமன்பிரீத்துக்கு வெள்ளி

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வியாழக்கிழமை ஒரே பிரிவில் இரு பதக்கங்கள் கிடைத்தன.25 மீட்டா் ஸ்டாண்டா்ட் பிஸ்டல் ஆடவா் தனிநபா் பிரிவில் இந்தியாவின் குா்பிரீத் சி... மேலும் பார்க்க

3-ஆவது சுற்றில் அல்கராஸ், ஜோகோவிச்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.உலகின் 2-ஆம் நிலை வீரரான அல்கராஸ் 6-1, 6-0,... மேலும் பார்க்க

இன்றுமுதல் புரோ கபடி லீக்

புரோ கபடி லீக் போட்டியின் 12-ஆவது சீசன் விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது.முதல் நாள் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ் - தெலுகு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ் - புணேரி பால்டன் அணிகள் மோதுகி... மேலும் பார்க்க