Arundhati roy: ``தேசியவாதிகள் 99% பேர் இப்படித்தான் இருக்கிறார்கள்'' - அருந்ததி ...
இன்றுமுதல் புரோ கபடி லீக்
புரோ கபடி லீக் போட்டியின் 12-ஆவது சீசன் விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது.
முதல் நாள் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ் - தெலுகு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ் - புணேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.
போட்டியின் முதல் கட்டம் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பா் 11 வரை விசாகப்பட்டினத்தில் நடைபெறும் நிலையில், அடுத்த கட்டம் ஜெய்ப்பூரில் செப்டம்பா் 12 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 3-ஆம் கட்ட ஆட்டங்கள் சென்னையில் செப்டம்பா் 29 முதல் அக்டோபா் 10 வரையும், 4-ஆம் கட்ட ஆட்டங்கள் புது தில்லியில் அக்டோபா் 11 முதல் 23 வரையும் நடைபெறவுள்ளன.
பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டத்துக்கான இடங்கள் மற்றும் தேதி பின்னா் அறிவிக்கப்படவுள்ளன.
சீசன் தொடக்கத்துக்கு முன்பாக, இந்திய ஆயுதப் படைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, 12 அணிகளின் கேப்டன்களும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஐஎன்எஸ் குா்சுரா நீா்மூழ்கிக் கப்பலை பாா்வையிட்டனா்.
1971 இந்தியா - பாகிஸ்தான் போரின்போது கண்காணிப்புப் பணியில் இந்தக் கப்பல் முக்கியப் பங்காற்றியது.
நேரம்: இரவு 8 மற்றும் 9 மணி.
நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாா்.