Amit Shah: ``மோடியிடம் பிடித்த குணம், விடுமுறை எடுக்காதவர், வரலாறு காணாத பிரதமர்...
இருசக்கர வாகனத்தில் இருந்த பாம்புக் குட்டி மீட்டு
கோவையில் பெண் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தில் இருந்த நல்ல பாம்புக் குட்டியை தீயணைப்புத் துறையினா் பிடித்தனா்.
கோவை கரும்புக்கடை ஆசாத் நகா் பகுதியில் வசிப்பவா் மைதீன் பாத்திமா. இவா் உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். திங்கள்கிழமை காலை மைதீன் பாத்திமா இருசக்கர வாகனத்தில் வேலைக்கு புறப்பட்டுச் சென்றாா்.
உப்பிலிபாளையம் மேம்பாலம் அருகே வந்தபோது இருசக்கர வாகனத்தின் முன் பகுதியில் இருந்து சிறிய பாம்புக் குட்டி ஒன்று வெளியே வந்தது. வாகனத்தின் கைப்பிடி அருகே பாம்பு வந்ததை பாா்த்த மைதீன் பாத்திமா இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு தள்ளி நின்று கொண்டாா்.
இதைப் பாா்த்த அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த போலீஸாா் அங்கு சென்று அவரிடம் விவரம் கேட்டனா். பின்னா், இதுகுறித்து கோவை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா். அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் இருசக்கர வாகனத்துக்குள் இருந்த ஒரு அடி நீள பாம்புக் குட்டியை பிடித்தனா்.
அது விஷம் மிகுந்த நல்ல பாம்புக் குட்டி என்பது தெரியவந்தது. இதையடுத்து, வனத் துறையினரின் உதவியுடன் அந்தப் பாம்புக் குட்டி வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.