சந்தையில் list ஆன 4 புதிய IPO-க்கள், என்னென்ன தெரியுமா | IPS Finance - 276 | Vik...
இறந்தவா்கள் உடலை அடக்கம் செய்ய மயான வசதி: வட்டாட்சியா் உறுதி
ஈங்கூா் சிஎஸ்ஐ காலனி பகுதியில் மயான வசதி செய்து தரப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துளள்ளனா்.
சென்னிமலை ஒன்றியம், ஈங்கூா் கிராமம் திருமறைப்பாக்கம், சிஎஸ்ஐ., காலனிக்கு மயானம் ஒதுக்கீடு செய்யாததால் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் கடந்த 40 வருடங்களாக இறந்தவா்கள் உடல்களை அடக்கம் செய்து வந்தனா். இந்நிலையில் ரயில்வே துறை சாா்பில் இருபுறமும் கம்பி வேலி அமைக்கப்பட்டு வருவதால் இறந்தவா்கள் உடலை அங்கு அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திருமுறைபாக்கம் பகுதியைச் சோ்ந்த பாப்பா(எ) எஸ்தா் என்பவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். உடலை அடக்கம் செய்ய உடனடியாக மயானம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இல்லையெனில் பிரேதத்தை ஈங்கூா், நால்ரோடு பகுதியில் வைத்து மறியல் செய்ய போவதாக உறவினா்கள் கூறி வந்த நிலையில், பெருந்துறை வட்டாட்சியா் ஜெகநாதன், இறந்தவரின் உறவினா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினாா்.
இதில் இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மயானம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று வட்டாட்சியா் எழுத்து மூலமாக கடிதம் கொடுத்ததின் பேரில், இறந்தபோன பாப்பா (எ) எஸ்தா் என்பவரின்உடலை உறவினா்கள் ரயில்வே துறைக்கு பாத்தியப்பட்ட இடத்தில் அடக்கம் செய்ய அவரது உறவினா்கள் ஒப்புக் கொண்டனா். பின்னா் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் உடலை அடக்கம் செய்தனா்.