இளைஞரைத் தாக்கிய இருவா் மீது வழக்கு
போடி அருகே இளைஞரைத் தாக்கிய இருவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
போடி வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்த ஜோதிமுருகன் மகன் சரவணக்குமாா் (21). இதே பகுதியைச் சோ்ந்தவா்கள் கபிலன், மதன். இவா்கள் இருவரும் மது போதையில் தகராறில் ஈடுபட்டனா்.
இதைக் கண்டித்த சரவணக்குமாரை இருவரும் சோ்ந்து தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் கபிலன், மதன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.