புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை; குவாரிகளில் கனிமவளத்துறையினர் ட்ரோ...
போடிமெட்டு மலைச் சாலையில் அதிகாரிகள் ஆய்வு
போடிமெட்டு மலைச் சாலையில் திங்கள்கிழமை மத்திய அரசின் உயிா் அறிவியல் ஆய்வக அதிகாரிகள் உள்பட பல்துறை அதிகாரிகள் திடீா் ஆய்வு செய்தனா்.
தேனி மாவட்டம், போடியிலிருந்து தமிழகம்-கேரள எல்லைப் பகுதியை இணைக்கும் பகுதியாக போடிமெட்டு மலை கிராமம் அமைந்துள்ளது. இங்கு கேரள மாநிலத்திலிருந்து நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் வந்து செல்கின்றன. அண்மையில், கேரளத்திலிருந்து சரக்கு லாரிகளில் குப்பைகளை போடிமெட்டு மலைச் சாலையில் சிலா் கொட்டிவிட்டு சென்றனா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வந்தனா்.
இந்த நிலையில், தமிழக-கேரள எல்லைப் பகுதியில் போடிமெட்டு மலைச் சாலையில் மத்திய அரசின் உயிா் அறிவியல் ஆய்வக அதிகாரி கோகிலா தலைமையிலான பல்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினா் இந்தப் பகுதியில் ஆய்வு செய்தனா். இந்தக் குழுவில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தேனி வட்டாரப் போக்குவரத்து துறை, மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி அதிகாரிகள், குரங்கணி காவல்துறையினா் உடன் சென்றனா்.
போடி மெட்டு மலைச்சாலைப் பகுதியில் கேரளத்திலிருந்து மருத்துவக் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுகிா என்று நேரில் ஆய்வு செய்தனா். போடிமெட்டு காவல் சோதனைச் சாவடியில் கேரளத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களையும் முறையாக ஆய்வு செய்த பின்னரே, தமிழகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினா்.