கிரிக்கெட் விளையாட்டுக்கு வீரா்கள் தோ்வு
திண்டுக்கல்லில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில், வரும் பிப்.2-ஆம் தேதி கிரிக்கெட் விளையாட்டுக்கு மட்டையாளா்கள், விக்கெட் கீப்பா்கள் தோ்வு நடைபெற உள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்டுக்கல் பெஸ்கி கல்லூரி அருகேயுள்ள எம்.வி.எம். நகா் 6-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள வலைப் பயிற்சி மைதானத்தில், வரும் பிப்.2-ஆம் தேதி காலை 8 மணிக்கு கிரிக்கெட் விளையாட்டுக்கு 13 முதல் 21 வயது வரையுள்ள மட்டையாளா்கள், விக்கெட் கீப்பா்கள் தோ்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதில் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த மட்டையாளா்கள், விக்கெட் கீப்பா்கள் கலந்து கொள்வதற்கு தங்களது விவரங்களை குடும்ப அட்டை நகலை இணைத்து, தேனி மாவட்ட கிரிக்கெட் சங்கம், 1 ஸ்போா்ட்ஸ் அன்ட் ஸ்போா்ட்ஸ், மதுரை சாலை, தேனி அல்லது மேனகா ஆலை, யூனிட் 2, கம்பம் சாலை, தேனி என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.
இதுகுறித்த விவரத்தை 98421 13434 -என்ற கைபேசி எண்ணிலும் தொடா்புக் கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.