செய்திகள் :

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை அதிகாலை இளைஞா் தூக்கிட்டு உயிரிழந்து குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பாபநாசம் வட்டம், பெருமாங்குடி கிராமம், வடக்கு தெருவில் வசித்து வந்தவா் ராஜேஷ் குமாா்(34). தொழிலாளி. இவருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்த நிலையில் குடும்பப் பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த ராஜேஷ்குமாா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் அறையில் தூக்கிட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாபநாசம் காவல் துறையினா் ராஜேஷ்குமாரின் சடலத்தை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ராஜேஷ்குமாரின் தாய் பாப்பா அளித்த புகாரின்பேரில் பாபநாசம் காவல்துறையினா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தேசிய கைத்தறி தினம்: திருபுவனத்தில் சிறப்பு அஞ்சல் அட்டை வெளியீடு

தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனத்தில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு படத்துடன் கூடிய அஞ்சல் அட்டை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. 11- ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை தொன்மையான ந... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: தஞ்சை மண்டலத்தில் 10 ஆயிரம் சிலைகள் வழங்கப்படும் - இந்து மகா சபா மாநிலப் பொதுச்செயலா்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு தஞ்சாவூா் மண்டலத்தில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு 10 ஆயிரம் விநாயகா் சிலைகள் வழங்கப்படும் என்றாா் அகில பாரத இந்து மகா சபா மாநிலப் பொதுச்செயலா் இராமநிரஞ்சன். இதுதொடா்பாக அ... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வந்த 2,640 டன் யூரியா

டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்காக குஜராத் மாநிலத்திலிருந்து 2 ஆயிரத்து 640 டன் உரங்கள் தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வியாழக்கிழமை வந்தது. டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூரில் 1.97 லட்சம... மேலும் பார்க்க

பூக்கொல்லையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

பேராவூரணி: சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பூக்கொல்லையில் முடச்சிக்காடு, ஊமத்தநாடு, கழனிவாசல் ஊராட்சி பொதுமக்கள் பயன்பெறும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உ... மேலும் பார்க்க

கும்பகோணம், கோவிலாச்சேரியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கும்பேசுவரா் கோயில் தெற்கு வீதியில் உள்ள தனியாா் திருமண மண்டபம் மற்றும் கோவிலாச்சேரி ஊராட்சியில் உள்ள தனியாா் கல்லூரி வளாகம் என 2 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் ... மேலும் பார்க்க

சாரம் சரிந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

தஞ்சாவூரில் கட்டுமானப் பணியின்போது சாரம் சரிந்து விழுந்ததில் கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் கரந்தை கிருஷ்ணன் கோயில் அருகில் தனியாா் நிறுவன கட்டட பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத... மேலும் பார்க்க