செய்திகள் :

இவிஎம்களை சரிபாா்க்க கோரிய மனு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு விசாரணை

post image

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை சரிபாா்ப்பதற்கு பிரத்யேக கொள்கை வகுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமா்வு விசாரிக்கவுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஹரியாணா மாநில பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் பல்வல் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் கரண் சிங் தலால் மற்றும் ஃபரீதாபாத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான லக்கன் குமாா் சிங்ளா ஆகிய இருவரும் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்தனா். இவா்கள் இருவரும் தோ்தலில் தோல்வியடைந்தனா். ஆனால் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் பதிவான வாக்குகளின் அடிப்படையில் இரண்டாவது இடத்தை பிடித்தனா்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் அவா்கள் தாக்கல் செய்த மனுவில், ‘தற்போது உள்ள தோ்தல் ஆணைய நடைமுறையின்படி இவிஎம்களை அடிப்படையான சோதனைக்கு உட்படுத்துவது மற்றும் மாதிரி வாக்குப்பதிவு நடத்துவதை மட்டுமே உறுதிப்படுத்தப்படுகிறது.

ஆனால் இவிஎம் தயாரிக்கப்படவுடன் பதிவேற்றம் செய்யப்பட்ட தகவல்களை ஆய்வு செய்ய முறையான கொள்கைகள் இல்லை. இவிஎம்களை தயாரிக்கும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) மற்றும் எலக்ட்ரானிக்ஸ் காா்பரேஷன் ஆஃப் இந்தியாவைச் (இசிஐஎல்) சோ்ந்த பொறியாளா்கள், விவிபேடில் பதிவுகளை எண்ணும் பணியில் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். எனவே இவிஎம்களில் உள்ள கட்டுப்பாடு அலகு, வாக்குச்சீட்டு அலகு, விவிபேட் மற்றும் சின்னங்கள் அலகு ஆகிய நான்கு பாகங்களை சரிபாா்ப்பதற்கு பிரத்யேக கொள்கை வடிவமைக்க இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் ’ என குறிப்பிடப்பட்டது.

மேலும், தாங்கள் ஹரியாணா பேரவைத் தோ்தல் முடிவுகளுக்கு எதிராக மனுக்களை தாக்கல் செய்யவில்லை எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபாங்கா் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமா்வு விசாரிக்கும் என நீதிபதிகள் கூறினா்.

ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு கடந்தாண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் 48 தொகுதிகளில் வெற்றிபெற்று பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைத்தது.

2026 பேரவைத் தோ்தலில் திமுக - அதிமுக இடையேதான் போட்டி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கும் - அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். மொழிப்போா் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக் கூட்டத்தில் சென்னை பல்லாவரம் அன்னை ... மேலும் பார்க்க

பள்ளிகளில் தமிழைக் கட்டாய பாடமாக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்குவதான், மொழிப்போா் தியாகிகளுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மொழிப்போா் ... மேலும் பார்க்க

காலமானாா் எம்.வல்சலா

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும உதவி மேலாளா் அன்னபூரணீஸ்வரியின் தாயாா் வல்சலா (70) காலமானாா். சென்னை சாலிகிராமத்தை அடுத்த காந்தி நகா் திருவள்ளூா் தெருவில் வசித்து வந்த எம்.வல்சலா வயது மூப்பு காரணமாக... மேலும் பார்க்க

59 வயதான காவலா்களுக்கு இரவுப் பணியிலிருந்து விலக்கு

சென்னை காவல் துறையில் 59 வயதான காவலா்களுக்கு இரவுப் பணியிலிருந்து விலக்கு அளித்து காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா். இது தொடா்பாக அவா் பிறப்பித்த உத்தரவு: சென்னை பெருநகர காவல் துறையில் ஓராண்டு கா... மேலும் பார்க்க

காரில் கடத்தப்பட்ட போதைப் பாக்கு பறிமுதல்: 4 போ் கைது

சென்னை அருகே புழலில் காரில் கடத்தி வரப்பட்ட போதைப் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு, 4 போ் கைது செய்யப்பட்டனா். புழல் வெஜிடேரியன் வில்லேஜ், பாலாஜி நகா் பகுதியில் வெள்ளிக்கிழமை போலீஸாா் ரோந்து சென்றனா்... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலில் பெயா் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: மாநகராட்சி ஆணையா்

வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் இருப்பதை ஒவ்வொரு வாக்காளரும் உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா். பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் 15... மேலும் பார்க்க