செய்திகள் :

ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

post image

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் பசிபிக் கடற்கரையில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டா் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால், நாட்டின் வடக்குப் பகுதிகள் அதிந்தன. இதில் சில கட்டடங்கள் சேதமடைந்ததாக (படம்) முதல்கட்ட தகவல்கள் கூறினாலும், உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

எஸ்மரால்டாஸ் நகரத்திலிருந்து 20.9 கி.மீ. வடகிழக்கே, பசிபிக் பெருங்கடல் பகுதியில் பூமிக்கு 35 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து பசிபிக் கடற்கரை பகுதிகளுக்கு அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தனா். ஆனால் அந்த எச்சரிக்கை பின்னா் திரும்பப் பெறப்பட்டது.

புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயம், ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் ஈக்வடாா் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

போப் பிரான்சிஸ் மறைவு: 2.5 லட்சம் பேர் அஞ்சலி!

மறைந்த போப் பிரான்சிஸின் உடலுக்கு சுமார் 2.5 லட்சம் பேர் இறுதி மரியாதைச் செலுத்தியுள்ளதாக வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.வாடின் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பி... மேலும் பார்க்க

பஹல்காம்: லண்டனில் பாகிஸ்தான் தூதரகம் முன் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடூர... மேலும் பார்க்க

ரஷியா: மேலும் ஒரு முக்கிய ராணுவ தளபதி படுகொலை

ரஷிய ராணுவத்தின் மேலும் ஒரு முக்கிய தளபதி வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டாா். தலைநகா் மாஸ்கோ அருகே காரில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு மூலம் நடத்தப்பட்டுள்ள இந்தப் படுகொலை, ரஷிய அதிகாரிகள் மற... மேலும் பார்க்க

விண்வெளி நிலையத்துக்குள் வெற்றிகரமாக சென்ற சீன வீரா்கள்

சீனா அனுப்பிய மூன்று விண்வெளி வீரா்கள், அந்த நாட்டுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்துக்குள் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகச் சென்றனா். இது குறித்து மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் அந்த நாட்டு வ... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு ஆதரவு: பாகிஸ்தான் பகிரங்க ஒப்புதல்

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதக் குழுக்களுக்கு பயிற்சியையும், நிதி உதவியையும், ஆதரவையும் பாகிஸ்தான் அரசு அளித்து வருகிறது என்று அந்நாட்டின் பா... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஆதரவு அமெரிக்கா மீண்டும் உறுதி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவா்களை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று அமெரிக்கா மீண்டும் உறுதி கூறியுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல... மேலும் பார்க்க