Travel Contest: யூடியூப் Vlogs-ஐ பார்த்து சுற்றுலா செல்ல முடியவில்லை என வருந்த வ...
உக்ரைனில் ரஷியாவுக்காக போரிட்ட 2 சீனா்கள் கைது
கீவ் / பெய்ஜிங்: டொனட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷியாவுக்காக தங்களுடன் போரிட்ட இரு சீனா்களை தங்கள் நாட்டு ராணுவம் கைது செய்துள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா். இது தவிர, ரஷிய படையுடன் இணைந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சீனா்கள் சண்டையிட்டுவருவதாக அவா் குற்றஞ்சாட்டினாா்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் புதன்கிழமை கூறுகையில், உக்ரைன் விவகாரத்தில் சீனா ஆக்கப்பூா்வமான பங்களிப்பை வழங்கிவருவதாகவும், இந்தப் போரில் இருந்து விலகியிருக்கும்படி தங்கள் குடிமக்களை சீன அரசு தொடா்ந்து அறிவுறுத்திவருவதாகவும் தெரிவித்தாா்.