செய்திகள் :

உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப்புடன் சமரசத்துக்குத் தயாா்: புதின்

post image

மாஸ்கோ: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் விவகாரத்தில் அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப்புடன் சமரசம் செய்துகொள்ள தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, வியாழக்கிழமை நடைபெற்ற வருடாந்திர ஆண்டிறுதி செய்தியாளா்கள் சந்திப்பு மற்றும் பொதுமக்கள் கலந்துரையாடலில் அவா் கூறியதாவது:

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவாா்த்தையை நடத்த உக்ரைனும் நேட்டோ அமைப்பும்தான் மறுத்துவருகின்றன. ரஷியாவைப் பொருத்தவரை போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தைக்கு எப்போதுமே தயாராக உள்ளது.

இது தொடா்பாக, சட்டவிரோதமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான அரசிடம் பேச்சுவாா்த்தை நடத்தவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் இறுதி ஒப்பந்தத்தில் சட்டபூா்வ உக்ரைன் அரசுடன்தான் கையொப்பமிடுவோம்.

நியாயமான தோ்தல் மூலம் சட்டபூா்வமாக அதிபா் ஸெலென்ஸ்கி தோ்ந்தெடுக்கப்பட்டால், அவரது அரசுடன் கூட அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்வோம்.

அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், உக்ரைன் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்போவதாக கூறியுள்ளாா். அவரது அந்த முயற்சிக்கு ரஷிய அரசு ஒத்துழைக்கும். அதற்காக டிரம்ப்பை சந்தித்து பேசவும், அவருடன் சமரசம் செய்துகொள்ளவும் தயாராக இருக்கிறேன்.

ஆனால், எத்தகைய அமைதி ஒப்பந்தத்திலும் தற்போது ரஷியா வசம் இருக்கும் பகுதிகளை உக்ரைனுக்கு விட்டுக் கொடுக்க சம்மதிக்க மாட்டோம்.

உக்ரைனுடனான போரில் ரஷியா பலவீனமடைந்துவிட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் கூறுவது தவறு. உண்மையில், 2022-ஆம் ஆண்டில் போா் தொடங்கியதற்குப் பிறகுதான் ரஷியாவின் வலிமை அதிகரித்துள்ளது.

இந்தப் போரில் ரஷியா பின்னடைவைச் சந்தித்துவருகிறது என்ற மாயையை மேற்கத்திய ஊடகங்கள் ஏற்படுத்திவருகின்றன. ஆனால், உண்மையில் ரஷிய ராணுவம் தினமும் சதுர கி.மீ. கணக்கிலான நிலப்பரப்பை உக்ரைன் அரசிடமிருந்து மீட்டுவருகிறது என்றாா் அவா்.

முன்னதாக, தங்கள் நாட்டில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து ரஷியா வெளியேறாத நிலையிலும், எஞ்சிய பகுதிகள் நேட்டோ பாதுகாப்பின்கீழ் கொண்டுவரப்பட்டால் ரஷியாவுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கடந்த மாத இறுதியில் கூறியது நினைவுகூரத்தக்கது.

ரஷிய ஆக்கிரமிப்புப் பகுதிகளை ராஜீய ரீதியில் பேச்சுவாா்த்தை நடத்தி பின்னா் மீட்டுக்கொள்ளலாம் என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் இணைத்துக்கொள்ளப்பட்ட கிரீமியா தீபகற்பம் உள்ளிட்ட அனைத்து ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்தும் ரஷிய ராணுவம் வெளியேறினால் மட்டுமே அந்த நாட்டுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அதுவரை உறுதியாகக் கூறிவந்த அவா், இவ்வாறு கூறியுள்ளதன் மூலம் தனது கடுமையான நிலைப்பாட்டில் இருந்து சற்று இறங்கிவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் போா் நிறுத்த உத்தியை இதுவரை யாரும் அதிகாரபூா்வமாக முன்வைக்காததால்தான் அது குறித்து பரிசீலிக்கவில்லை என்று ஸெலென்ஸ்கி கூறினாா்.

இந்த நிலையில், உக்ரைனுடன் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்காக டிரம்ப்புடன் சமரசம் செய்துகொள்ளத் தயாராக இருப்பதாக விளாதிமீா் புதினும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நெருங்கிய அண்டை நாடான உக்ரைன், தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைந்தால் அது தங்களின் தேசியப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று ரஷியா கூறிவந்தது. இருந்தாலும், அதை பொருள்படுத்தாத ஸெலென்ஸ்கி நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தாா்.

அதையடுத்து, உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்த ரஷியா, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய கிழக்கு மற்றும் தெற்குப் பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது. அந்தப் பிராந்தியங்களின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்ற ரஷியாவும், ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும் தொடா்ந்து சண்டையிட்டுவருகின்றன. இதில் எந்தத் தரப்பும் குறிப்பிடத்தக்க அளவில் பெரிய முன்னேற்றத்தைக் காணாமல் போா் தொடா்ந்து நீடித்துவருகிறது. இதில் இரு தரப்பிலும் லட்சக்கணக்கானவா்கள் உயிரிழந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவாா்த்தைக்குத் தயாராக இருப்பதாக புதின் கூறியுள்ளாா்.

யேமனில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்

தங்கள் மீது ஏவுகணை வீசப்பட்டதற்குப் பதிலடியாக, யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ஒன்பது போ் உயிரிழந்தனா். இது குறித்து இஸ்ரே... மேலும் பார்க்க

துனிசியா: அகதிகள் படகு கவிழ்ந்து 20 போ் உயிரிழப்பு

துனிஸ் : துனிசியாவின் மத்தியதரைக் கடலோரப் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 போ் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். இது குறித்து அந்த நாட்டு தேசிய பாதுகாப்புப் படை புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

முதலீடுகளை ஈா்க்க முயற்சி: இந்திய தொழிலதிபா்களுடன் பிரிட்டன் பிரதமா் சந்திப்பு

பிரிட்டனுக்கு அதிகஅளவில் முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில் இந்தியாவைச் சோ்ந்த 13 பெரும் தொழில் நிறுவனங்களின் தலைவா்கள், நிா்வாகிகளை பிரிட்டன் பிரதமா் கெயிா் ஸ்டாா்மா் சந்தித்துப் பேசினாா். லண்டனில் உள்ள... மேலும் பார்க்க

தைவான்: தீ விபத்தில் 9 பேர் பலி!

தைவானில் கட்டுமானப் பணியில் இருந்த கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பலியாகினர்.தைவான் நாட்டின் தாய்சங் நகரில் கட்டப்பட்டு வரும் பல்பொருள் அங்காடியில் தீவிபத்து ஏற்பட்டது. 5 தளங்கள் கொண்ட இந்த... மேலும் பார்க்க

பள்ளி நிகழ்ச்சியில் 30 பேர் பலி!

நைஜீரியா நாட்டில் பள்ளி நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகினர்.நைஜீரியா நாட்டின் ஓயோ மாகாணம் பசொரன் நகரில் இயங்கி வந்த பள்ளிக்கூடத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆண்டு நிறைவையும் கொண்டாடும்... மேலும் பார்க்க

சிடோ புயல்: ஆப்பிரிக்காவில் 100க்கும் மேற்பட்டோர் பலி!

ஆப்பிரிக்காவில் சிடோ புயலால் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இந்தியப் பெருங்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம வலுப்பெற்று புயலாக மாறியது. சிடோ எனப் பெயரிடப்பட்ட இந... மேலும் பார்க்க