செய்திகள் :

'உங்க அன்ப புரிஞ்சுக்குறேன்.. ஆனால்..!' - தவெக தலைவர் விஜய் பதிவு!

post image

கோவை கருத்தரங்கில் தொண்டர்கள் சிலரின் அத்துமீறிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி முகவர்கள் கருத்தரங்கு கோவையில் கடந்த ஏப். 26 அன்று நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் இதில் பங்கேற்று வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

முன்னதாக விஜய், கோவை வருவதையொட்டி விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். மேலும், சாலை பேரணியின்போது தொண்டர்கள் பலரும், விஜய் பேரணி நடத்திய வாகனத்தின் மீது ஏறினர். அதேபோல சாலையில் விஜய் செல்லும் காரை பின்தொடர்ந்து பைக்கில் சென்றனர். இது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய் இதுதொடர்பாக தொண்டர்களுக்கு அன்புக் கட்டளை விடுப்பதாக எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம்.

மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி முகவர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த என்னை உங்கள் அளவு கடந்த அன்பால் நனைய வைத்தீர்கள்! I love you Kovai and Kongu Thangams.

நம் மீது இத்துணை அன்பைக் காட்டும் உங்களுக்கும் மக்களுக்கும், உண்மையான மக்களாட்சியையும் உண்மையான ஜனநாயக அதிகாரத்தையும் மீட்டுத் தருவதுதான் நாம் காட்டும் அன்புக் காணிக்கையாக இருக்கும். 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றியால் இதை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தமிழகமெங்கும் உள்ள நம்முடைய இளம் தோழர்களுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள்கள் சில உண்டு. அவை அன்புக் கட்டளைகளாகவும் இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

நம்முடைய இளைய தோழர்கள், நமது வாகனங்களை இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடருவது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு மிகவும் கவலையை அளித்தன.

அதனால இப்ப கொஞ்சம் உங்ககிட்ட மனசு விட்டு பர்சனலா பேச விரும்பறேன்…

நம்ம பயணத்தப்ப ஆம்புலன்ஸ் வந்ததும் அதுக்கு வழிய சரிபண்ணிவிட்ட உங்க செயல பாராட்டியே ஆகணும்… அதுதான் நீங்க…

இப்டில்லாம் செய்ற நீங்க, அன்பின் காரணமா செய்ற சிலதையும் சொல்லி ஆகணும்…

உங்களோட அன்ப புரிஞ்சுக்கறேன் ஃப்ரெண்ட்ஸ்… அதுக்கு நான் தலைவணங்கவும் செய்யறேன்…

ஆனா எப்பவுமே நம்மளோட அன்பை வெளிப்படுத்துற விதம், அதீதமாகவே இருந்தாலும் அது மத்தவங்களுக்கு முன்னுதாரணமாத்தான் இருக்கணும்…

எல்லாத்துக்கும் மேல உங்களோட பாதுகாப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம்…

நீங்கதான் எனக்கு precious…

இவ்ளோ அன்போட இருக்கிற நீங்க எனக்குக் கிடைச்சதுக்கு நான் என்ன தவம் செஞ்சேன்னு எனக்குத் தெரியல…

உங்கள நான் கை கூப்பித் தலைவணங்கிக் கேட்டுக்கிறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்…

உங்க அன்ப நான் மதிக்கறேன்… இனி எப்பவும் மதிப்பேன்… அதேபோல நீங்களும் என்மேல அன்போட இருக்கறது உண்மைன்னா எப்பவும் இதுபோல இனி நீங்க செய்யவே கூடாது…

நான் இங்கே சொல்லி இருக்கற மாதிரி, இத நீங்க கட்டளையாகவோ கண்டிப்பாகவோகூட எடுத்துக்கங்க… தப்பே இல்ல…

நம்ம அரசியல்ல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட கண்டிப்பும் self discipline-ம் 100% சமரசமற்றதாத்தான் இருக்கணும் ஃப்ரெண்ட்ஸ்…

அதுதான் நம்ம அரசியலுக்கும் நல்லதுன்னு உங்களுக்கே தெரியும்...

இனி அடுத்தடுத்து நம்ம மக்கள சந்திக்கிற நிகழ்ச்சிகளெல்லாம் இருக்கறதால நான் சொல்றத நீங்க இனிமே ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ செய்வீங்கன்னு நம்பறேன்…

செய்வீங்க… செய்றீங்க…

ஓகே?...

Thank u friends….

Love you all…" என்று பதிவிட்டுள்ளார்.

விஜயகாந்த்துக்கு பாரத ரத்னா, மணிமண்டபம்! தேமுதிக பொதுக் குழுவில் தீர்மானம்!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசையும் மணிமண்டபம் கட்ட தமிழக அரசை வலியுறுத்தியும் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தருமபுரி... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள் கொண்ட இணையப்பக்கம்: மு.க. ஸ்டாலின்

சென்னை: குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் சூட்ட விரும்புபவர்களுக்கான இணையப்பக்கம் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தம்பி அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும். குழந்தைகளுக்கா... மேலும் பார்க்க

கூட்டாட்சி என்பதே உண்மையான தேசபக்தி: முதல்வர் ஸ்டாலின்

தேசபக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல. மாநில உரிமைகளுடனான கூட்டுறவுக் கூட்டாட்சி மிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தியாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும் முதல... மேலும் பார்க்க

சென்னை மக்கள் கவனத்துக்கு... பசுமை காய்கறிகள்-பழங்கள் விற்பனை!

தமிழ்நாடு அரசின் ”நம்ம சென்னை நம்ம சந்தை” அங்காடி மூலம் பாரம்பரிய பசுமை காய்கறிகள்-பழங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சென்னைவாழ் மக்களுக்கு பாரம... மேலும் பார்க்க

60,000 பேருக்கு வேலை: மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தை வெளியிட்ட முதல்வர்!

முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப். 30) மின்னணு உதிரிபாகங்கள் (electronic components) உற்பத்திக்கான தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தினை (Tamil Nadu Electronics Components Manufactur... மேலும் பார்க்க

கடலூரில் ஜன. 9ஆம் தேதி தேமுதிக மாநில மாநாடு: பிரேமலதா அறிவிப்பு

தேமுதிக கட்சியின் மாநில மாநாடு வரும் ஜனவரி மாதம் 9ஆம் தேதி கடலூரில் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். மேலும் பார்க்க