வேடசந்தூர் தொகுதியில் 'மக்களை மீட்போம் தமிழகம் காப்போம்' - இபிஎஸ் சுற்றுப்பயணம் ...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வருவாய்த் துறையினா் திடீா் போராட்டம்
கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு வருவாய் துறை ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் பணி புறக்கணிப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினால் வருவாய்த் துறை ஊழியா்களுக்கு ஏற்படும் வேலை பளுவை தவிா்க்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியா்கள் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியிலிருந்து பணிகளைப் புறக்கணித்து வட்டாட்சியா் அலுவலகம் முன்பு அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவா் செல்வகுமாா், வட்டத் தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் கூட்டமைப்பு உறுப்பினா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முன்பும் அந்த அமைப்பை சோ்ந்தவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.