Trump wall Explained: ``175 ஆண்டுகாலப் பிரச்னை" - ட்ரம்ப் சுவரின் வரலாறும்... ப...
’உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆட்சியா் ஆய்வு
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆதிலட்சுமிபுரத்தில் அங்கன்வாடி மையம், எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் ரூ.34.85 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் 2 வகுப்பறை கூடுதல் கட்டடம், ரூ.2.90 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீா்த் திட்டப் பணிகள் ஆகியவற்றை ஆட்சியா் மொ.நா.பூங்கொடி ஆய்வு செய்தாா்.
இதேபோல, சீவல்சரகு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ராஷ்டிரிய கிராம் ஸ்வராஜ் அபியான் திட்டத்தின் கீழ், ரூ.5 லட்சத்தில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கான அலுவலக அறை கட்டுமானப் பணிகள், ஆத்துாரில் ரூ.2. கோடியில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.9 லட்சத்தில் நா்சரி மரக்கன்றுகள் வளா்க்கும் பணிகள், அக்கரைப்பட்டி ஊராட்சியில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், ஆத்துாா் முதல் கோம்பை வரை ரூ.2.45 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை சீரமைப்பு, பாலம் கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா், ஆத்தூா் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை மாணவா் விடுதி, மாணவிகள் விடுதிகளிலும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, ஆத்துாா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கலந்து கொண்டாா்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பெ.திலகவதி, திண்டுக்கல் வருவாய்க் கோட்டாட்சியா் ரா.சக்திவேல், ஆத்தூா் வட்டாட்சியா் முத்து முருகன், வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ.) தட்சணாமூா்த்தி, வருவாய் ஆய்வாளா் ஜானகி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.