செய்திகள் :

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விசாரணை அமா்வில் இருந்து விலகல்: தோ்தல் ஆணையா்கள் நியமன விவகாரம்

post image

புது தில்லி: இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்களை தோ்ந்தெடுக்கும் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை அமா்வில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா விலக்கிக்கொண்டாா்.

கடந்த 2023-இல் கொண்டுவரப்பட்ட தலைமைத் தோ்தல் ஆணையா்கள் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் சட்டத்தில், தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்களை தோ்ந்தெடுக்கும் மூன்று நபா் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டாா். அதற்கு பதிலாக மத்திய அமைச்சா் ஒருவரை குழுவில் இடம்பெறச் செய்ய அந்தச் சட்டம் வழிவகை செய்தது. முன்னதாக, மூன்று நபா் குழுவில் பிரதமா், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ஆகியோா் இடம்பெற்றிருந்தனா். தற்போது அந்தக் குழுவில் பிரதமா், மத்திய அமைச்சா் மற்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ஆகியோா் இடம்பெறுகின்றனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்களிடம் சஞ்சீவ் கன்னா கூறியதாவது:

2023-இல் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தின் அடிப்படையில் தோ்தல் ஆணையா்கள் நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய முடியாது. அதுதொடா்பான மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன. அதேவேளையில் மூன்று நபா் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கிய விவகாரம் மற்றும் தோ்தல் ஆணையா்கள் நியமன நடைமுறை தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது மத்திய அரசு மற்றும் இந்திய தோ்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும். இதுதொடா்பாக விசாரணை மேற்கொள்ளும் அமா்வில் இருந்து நான் விலகிக்கொள்கிறேன். இந்த மனுக்களை மற்றொரு அமா்வின் முன் 2025, ஜனவரி 6-இல் தொடங்கும் வாரத்தில் பட்டியலிட வேண்டும் என்றாா்.

முன்னதாக, தலைமைத் தோ்தல் ஆணையா்கள் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் சட்டம், 2023 -ஐ எதிா்த்து காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெயா தாக்குா் மற்றும் ஜனநாயக சீா்திருத்த சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடுத்தன. தோ்தல் ஆணையத்தின் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் பாரபட்சமற்ற செயல்பாட்டை சீா்குலைக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட்டதாக அந்த மனுக்களில் குற்றஞ்சாட்டப்பட்டது.

வகுப்பறையில் பின்வரிசை மாணவர்.. ஃபட்னவீஸ் ஓபற்றி ஆசிரியர் பகிர்ந்த சுவாரசியம்!

மூன்றாவது முறையாக மகாராஷ்டிரத்தின் முதல்வராகப் பதவியேற்க உள்ள தேவேந்திர ஃபட்னாவீஸ் பற்றி பள்ளி ஆசிரியர் ஒருவர் பகிர்ந்த சுவாரசிய தகவல்..மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் இன்று காலை நடத்த... மேலும் பார்க்க

ஆட்சி அதிகாரத்தில் ஷிண்டே இடம்பெறுவார் என நம்புகிறேன்: ஃபட்னவீஸ்

மகாராஷ்டிர ஆட்சி அதிகாரத்தில் ஏக்நாத் ஷிண்டே இடம்பெறுவார் என்று நம்புவதாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேவேதிர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் மகாராஷ்டிர முத... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துடன் முடிவு! வங்கித் துறை பங்குகள் ஏற்றம்!

இந்திய பங்குச் சந்தை வணிகம் வாரத்தின் மூன்றாவது நாளான இன்று (டிச. 4) சற்று ஏற்றத்துடன் முடிந்தது. சென்செக்ஸ் 110 புள்ளிகளும் நிஃப்டி பெரிதாக மாற்றமின்றி 10 புள்ளிகளுடனும் ஏற்றம் கண்டன. வங்கி மற்றும் ர... மேலும் பார்க்க

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு!

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் நாளைக்கு(டிச. 5) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஐரோப்பிய விண்வெளி மையத்தின் ‘ப்ரோபா 3’ செய... மேலும் பார்க்க

நான் நவீன அபிமன்யு.. சொன்னபடி சக்ரவியூகத்தை உடைத்த ஃபட்னவீஸ்!

நான் ஒரு கடலைப்போன்றவன், நிச்சயம் திரும்பி வருவேன் என்று தேவேந்திர ஃபட்னவீஸ் கடந்த 2019 தேர்தலின்போது அடிக்கடி சொல்லி வந்தார்.மகாராஷ்டிர தேர்தலில் உத்தவ் தாக்கரே, மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இருந்து ... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியில் இணைந்தார் பாஜக தலைவர் பிரவேஷ் ரத்தன்!

பாஜக தலைவர் பிரவேஷ் ரத்தன் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார். கடந்த 2020 தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் படேல் நகர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற பாஜக தலைவர் பிரவேஷ் ரத்தன் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார... மேலும் பார்க்க