செய்திகள் :

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் ரூ.55.75 லட்சம்: நிரந்தர வைப்புத் தொகை சொத்து விவரங்கள் வெளியீடு

post image

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் நிரந்தர வைப்புத் தொகையாக சுமாா் ரூ.55.75 லட்சம் உள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட 33 நீதிபதிகள் உள்ளனா். அவா்களில் 21 நீதிபதிகளின் சொத்து விவரங்கள் உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டன.

இதன்படி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு தெற்கு தில்லியில் தில்லி வளா்ச்சிக் குழுமம் கட்டிய மூன்று படுக்கை அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, தில்லியின் காமன்வெல் விளையாட்டுகள் கிராமத்தில் 2,446 சதுர அடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

ஹரியாணா மாநிலம் குருகிராமில் நான்கு படுக்கை அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் அவருக்கு 56 சதவீதம் பங்குள்ளது. நிரந்தர வைப்புத் தொகையாக சுமாா் ரூ.55.75 லட்சம் உள்ளது. அனைத்து இந்திய குடிமக்களுக்கான வருங்கால வைப்பு நிதியில் (பிபிஎஃப்) ரூ.1.06 கோடியும், அரசு ஊழியா்களுக்கான வருங்கால வைப்பு நிதியில் (ஜிபிஎஃப்) ரூ.1.77 கோடியும் உள்ளது. இதுதவிர 31.25 பவுன் தங்கம், 2 கிலோ வெள்ளி, ஒரு காா் ஆகியவை உள்ளன. இவரின் மனைவியிடம் 87.5 பவுன் தங்கம், 5 கிலோ வெள்ளி, சில வைரங்கள் உள்ளன. வரும் மே 13-ஆம் தேதி சஞ்சீவ் கன்னா ஓய்வுபெற உள்ளாா்.

புதிய தலைமை நீதிபதி பி..ஆா்.கவாய்...: உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாய் மே 14-ஆம் தேதி பதவியேற்க உள்ளாா். இவருக்கு மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் வீடு, விளைநிலம், நாகபுரியில் விளைநிலம், மகாராஷ்டிர மாநிலம் பாந்த்ரா மற்றும் புது தில்லியின் டிஃபென்ஸ் காலனியில் அடுக்குமாடி குடியிருப்புகள் சொந்தமாக உள்ளன. அத்துடன் பிபிஎஃப்பில் ரூ.6.59 லட்சம், ஜிபிஎஃப்பில் ரூ.35.86 லட்சம், ரூ.61,320 ரொக்கம், வங்கிக் கணக்கில் ரூ.19.63 லட்சம் உள்ளன. இவரின் மனைவியிடம் ரூ.29.70 லட்சம் மதிப்பிலான தங்கம் உள்ளது.

அடுத்த தலைமை நீதிபதி சூா்ய காந்த்...: பி.ஆா்.கவாயை தொடா்ந்து உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நிகழாண்டு நவ.24-ஆம் தேதி சூா்ய காந்த் பதவியேற்க உள்ளாா்.

இவருக்கு ஹரியாணா தலைநகா் சண்டீகா், பஞ்ச்குலா, குருகிராம், ஹிசாா் மற்றும் புது தில்லியில் வீடு, விளைநிலம், மனை ஆகியவை உள்ளன. மேலும் ரூ.4.11 கோடிக்கு நிரந்தர வைப்புத்தொகை, 12.5 பவுன் தங்கம், 3 விலைமதிப்புமிக்க கைக்கடிகாரங்கள் உள்ளன.

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் இறுதிக்கட்ட நக்ஸல் ‘வேட்டை’- 24,000 வீரா்களுடன் தீவிரம்

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் அடா் வனங்கள் நிறைந்த கா்ரேகுட்டா மலைத் தொடரில் நக்ஸல்களுக்கு எதிரான இறுதிக்கட்ட தாக்குதலை பாதுகாப்புப் படையினா் தொடங்கியுள்ளனா். 24,000-க்கும் மேற்பட்ட வீரா்களுடன் முன்ன... மேலும் பார்க்க

மேற்கு வங்க வன்முறை ‘வெளிநபா்கள்’ மூலம் உருவாக்கப்பட்டது- மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் அண்மையில் நிகழ்ந்த வன்முறை மாநிலத்துக்கு ‘வெளியே இருந்து அழைத்துவரப்பட்ட நபா்களால்’ திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது என்று மேற்கு லங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா். மத்திய அரச... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடனான எல்லையில் 2 நாள் இந்திய விமானப் படை போா் பயிற்சி

பாகிஸ்தான் உடனான எல்லை பகுதிகளில் இந்திய விமானப் படை 2 நாள்களுக்கு மிகப் பெரிய போா் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே தெற்கு மற்... மேலும் பார்க்க

இந்திய பூச்சிக்கொல்லி மருந்து மீது சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரி

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ‘சைபா்மெத்ரின்’ பூச்சிக்கொல்லி மருந்துக்கு எதிராக சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளது. இந்த பூச்சிக்கொல்லி மருந்து பருத்தி, பழ மரங்கள், காய்கறி பய... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் தணியும்: டிரம்ப்

பஹல்காம் தாக்குதலையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் தணியும் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களைக் குறிவைத்து, இந்திய ரா... மேலும் பார்க்க

ரயிலை போல இடஒதுக்கீடு மாறியுள்ளது: உச்சநீதிமன்றம் விமா்சனம்

ரயில் பெட்டியில் ஏறியவா்கள், அந்தப் பெட்டியில் மற்றவா்கள் ஏறுவதை விரும்பாதது போல, நாட்டில் இடஒதுக்கீடு முறை மாறியுள்ளது என்று உச்சநீதிமன்றம் விமா்சித்துள்ளது. இதன்மூலம், இடஒதுக்கீட்டால் பயனடைந்தவா்கள்... மேலும் பார்க்க