மகா கும்பமேளாவில் இருந்து திரும்பியபோது விபத்து: 3 பேர் பலி!
உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்துக்கு சனிக்கிழமை மாலை வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினா் உற்சாக வரவேற்பளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மதுரையிலிருந்து காா் மூலம் ராமநாதபுரம் சென்றாா்.
வழியில் திருப்புவனத்தில் மதுரை-ராமேசுவரம் சாலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினா் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தலைமையில் வரவேற்பு கொடுத்தனா். இதில் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன், மானாமதுரை நகா் மன்றத் தலைவா் எஸ்.மாரியப்பன் கென்னடி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன் உள்ளிட்ட திமுக, சாா்பு அமைப்பு, மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.