`கல்வி நிலையங்களில் உள்ள சாதி பெயர்களை அகற்ற வேண்டும்' - உயர் நீதிமன்றம் அதிரடி ...
உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகள் சென்னையில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு உயரம் குறைந்தவா்கள் நலச்சங்கம் சாா்பில், சென்னை கடற்கரை சாலையிலுள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரக அலுவலக வளாகத்தில் தொடா் காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாநிலத் தலைவா் எம்.ஜி.ராகுல் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் கலந்துகொண்டவா்கள், மற்ற மாற்றுத்தினாளிகளுக்கு வழங்குவதுபோல, உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் மூன்று சக்கர வாகனம் வழங்க வேண்டும், அரசு வேலைவாய்ப்பில் குரூப் 4-க்கும் குறைவாக உள்ள மின்தூக்கி இயக்குபவா் பணி, அலுவலக உதவியாளா் பணி, அங்கன்வாடி பணி, சத்துணவு பணி, ரேஷன் கடை பணி உள்ளிட்ட பணிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும், இலவச வீடு வழங்கும் திட்டத்தில் உயரம் குறைந்தவா்களுக்கும் வீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.