செய்திகள் :

உயிர் பத்திக்காம... வா வாத்தியார் படத்தின் முதல் பாடல் வெளியானது!

post image

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள வா வாத்தியார் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

கார்த்தி நடிப்பில் கடைசியான வெளியான மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமானது.

இதனைத் தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ திரைப்படத்தில் கார்த்தி நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தில் நாயகியாக கிருத்தி ஷெட்டியும், வில்லனாக சத்யராஜும் முக்கியக் கதாபாத்திரத்தில் ராஜ்கிரணும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படத்தின் முதல் பாடலான ‘உயிர் பத்திக்காம’ பாடல் இன்று வெளியாகியுள்ளது.

பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை விஜய் நரேன், ஆதித்யா ரவீந்திரன், சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்தா இது? நம்பமுடியாத அளவுக்கு மாற்றம்!

நடிகர் அஜித்குமார் நம்பமுடியாத அளவுக்கு உடல் எடையை குறைத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.நடிகர் அஜித் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான விடாமுயற்சி படம் அவரது ... மேலும் பார்க்க

18 ஆண்டுகளான காஜல் அகர்வாலின் திரைப் பயணம்..!

நடிகை காஜல் அகர்வாலின் சினிமா பயணம் 18 ஆண்டுகளை நிறைவடைந்ததுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஹிந்தியில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால் தமிழில் பழனி படத்தில் தனது திரை... மேலும் பார்க்க

இன்று இனிய நாள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.15-02-2025சனிக்கிழமைமேஷம் இன்று மரியாதை நிமித்தமாக உயர்ந்தோரை சந்தித்து பெருமையடைவீர்... மேலும் பார்க்க

ஹைதராபாதை வீழ்த்தியது ஒடிஸா

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஒடிஸா எஃப்சி 3-1 கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. ஒடிஸாவுக்கு இது 7-ஆவது வெற்றி; ஹைதராபாதுக்கு இது 12-ஆவது தோல்வி. இந்த... மேலும் பார்க்க

மூனி, காா்டனா் அதிரடி: குஜராத் 201/5

மகளிா் பிரீமியா் லீக் (டபிள்யூபிஎல்) கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூருக்கு எதிராக குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் சோ்த்தது. இந்த ... மேலும் பார்க்க