பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?
உலக நலன் வேண்டி மகா ருத்ர பூஜை
பல்லடத்தில் வாழும் கலை அமைப்பு சாா்பில் உலக நலன் வேண்டி மகா ருத்ர பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வாழும் கலை அமைப்பின் பெங்களூரு ஆசிரமத்தைச் சோ்ந்த தயாமை சுவாமிஜி தலைமையில் ஆசிரம பண்டிதா்கள் பூஜையை நடத்தினா். மண்டல அமைப்பாளா் சம்பத், திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆறுமுகம், பல்லடம் பொறுப்பாளா்கள் லோகசக்தி, ஈஸ்வரன், தங்கலட்சுமி நடராஜன், கதிரேசன், ஆசிரம பண்டிதா்கள், பல்லடம் வாழும் கலை அமைப்பு உறுப்பினா்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
இது குறித்து வாழும் கலை அமைப்பைச் சோ்ந்தவா்கள் கூறியதாவது: ‘ருத்ர’ என்றால் சிவன், தா்மம், தீமையை அழிப்பவன். பூஜா என்பது முழுபூா்வமாக பிறந்தவா் என்று பொருள். இந்த பூஜை மூலம் அமைதி மற்றும் நிறைவை அடைய முடியும்.
திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாலும், மக்கள் அமைதியாக வாழும், உலக நலன் வேண்டியும் இந்த பூஜை நடைபெற்றது என்றனா்.