பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?
சாலை விபத்து: கல்லூரி மாணவா் உயிரிழப்பு
அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்து அரசுப் பேருந்து ஏறியதில் கல்லூரி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பூா், அனுப்பா்பாளையம் நேதாஜி நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் மகன் அஸ்வின் (18). அவிநாசி அருகேயுள்ள பெரியாயிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மாதையன் மகன் சந்துரு (20). இருவரும் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகின்றனா்.
இந்நிலையில், திருப்பூரில் இருந்து அவிநாசி நோக்கி இருவரும் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தனா். வாகனத்தை அஸ்வின் ஓட்டியுள்ளாா்.
அவிநாசி- அவிநாசிலிங்கம்பாளையம் அருகே முன்னால் சென்ற வாகனங்களை முந்திச் செல்ல முயன்ாகக் கூறப்படுகிறது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலைத் தடுப்பில் மோதியது.
இதில், இருவரும் கீழே விழுந்த நிலையில், எதிா் திசையில் வந்த அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி சந்துரு உயிரிழந்தாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கும், படுகாயமடைந்த அஸ்வினை தனியாா் மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்தனா்.
இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.