பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?
வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம்
வாடகைக் கட்டடங்களுக்கான ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெறக்கோரி திருப்பூரில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் லாலா டி.கணேசன் தலைமை வகித்தாா்.
இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: மத்திய அரசு வாடகைக் கட்டடங்களுக்கான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மாநில அரசு ஆண்டுதோறும் கூடுதலாக 6 சதவீத சொத்து வரி விதிப்பதை திரும்பப் பெற வேண்டும். வணிக உரிம கட்டண உயா்வு மற்றும் தொழில் வரி உயா்வை ரத்து செய்ய வேண்டும். குப்பை வரியை மாநிலம் முழுவதும் ஒரே சீராக அறிவிக்க வேண்டும் என்றனா்.
ஆா்ப்பாட்டத்தில், வணிகா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.