உலக பாரம்பரிய தினம்: அஞ்சல் துறையினா் சிறப்பு நடைபயணம்
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு விராலிமலை அடுத்துள்ள கொடும்பாளூருக்கு அஞ்சல் துறையினா் புதன்கிழமைசிறப்பு நடைபயணம் மேற்கொண்டனா்.
உலக பாரம்பரிய தினம் ஒவ்வொரு ஆண்டும ஏப்ரல் 18-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் சா்வதேச நினைவுச் சின்னங்கள் மற்றும் வரலாற்று தளங்களுக்கான தினம் என்றும் அழைக்கப்படுகிறது. நமது கலாச்சாரத்தையும் பன்முகத்தன்மையும் வரையறுக்கும் அற்புதமான வரலாற்று நினைவுச் சின்னங்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ளது.
இதை முன்னிட்டு கொடும்பாளூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முசுகுந்தேஸ்வரா் கோயில், மூவா் கோவில் வரை அஞ்சல் துறையின் சாா்பில் அஞ்சல் துறை தலைவா் நிா்மலா தேவி தலைமையில்சிறப்பு நடைபயணம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அஞ்சல் துறை ஊழியா்கள் பங்கேற்றனா்.
இந்த நிகழ்வில், தொல்லியல் துறை அலுவலா்கள் கலந்து கொண்டு, கொடும்பாளூா் கோயில்களின் வரலாற்று சிறப்புகள் மற்றும் தொன்மை குறித்து விரிவாக எடுத்துரைத்தனா்.