மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,554 கோடி பேரிடர் நிவாரண நிதி! தமிழகத்துக்கு பூஜ்யம்!
உலகில் `V' என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை கொண்டது 4 நாடுகள் மட்டும்தானா? -wow Facts
உலகில் உள்ள 195 நாடுகளில், நான்கு நாடுகளின் பெயர்கள் மட்டுமே 'V' என்ற எழுத்தில் தொடங்குகின்றன என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அந்த நாடுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
வனுவாட்டு
தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு அழகான தீவு நாடு தான் வனுவாட்டு. 80-க்கும் மேற்பட்ட தீவுகளால் ஆன இந்த நாடு அழகான நீர்வீழ்ச்சிகள் மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகளுக்கு பிரபலமானது.

வியட்நாம்
வியட்நாம் ஒரு தென்கிழக்கு ஆசிய நாடாகும். ஆசிய நாடுகளிலேயே அழகான நாடாக இது திகழ்கிறது. வியட்நாம் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பச்சை பசேலென்ற காடுகள், நீலம் விரிந்துகிடக்கும் கடல், செங்குத்து மலைகள் அடுக்கடுக்கான நீர்வீழ்ச்சிகள், பிரம்மாண்டமான சின்னங்கள் என வாழ்வை நிறைவானதாக்கும் விஷயங்களால் வியக்க வைக்கிறது வியட்நாம் நாடு. இந்த நாடு அதன் பாரம்பரிய இசை, நடனம் மற்றும் கலைக்கு பிரபலமான அடையாளங்களில் ஒன்றாகும்.
வெனிசுலா
வெனிசுலா தென் அமெரிக்கா கண்டத்தின் வடக்கில் அமைந்துள்ள நாடாகும். உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சியான ஏஞ்சல் நீர்வீழ்ச்சி வெனிசுலாவில் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி 979 மீட்டர் (3,212 அடி) உயரத்தை கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களைக் கொண்ட நாடு வெனிசுலா என்பது பலருக்கும் தெரியாது.

வாட்டிகன்
இது உலகின் மிகச் சிறிய நாடு. இந்த நாட்டை சுற்றிப்பார்க்க நமக்கு ஒரு நாள் கூட போதும். 2023-ல் இந்த நாட்டின் மக்கள் தொகை 820. உலகின் மிகப்பெரிய தேவாலயங்களில் ஒன்றான செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா, நாட்டின் பிரபலமான அடையாளங்களில் ஒன்றாகும். இந்த நான்கு நாடுகள் மட்டும் தான் உலகிலேயே v என்ற எழுத்தைக் கொண்ட நாடுகளாக உள்ளன.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...