ஊக்க மருந்து புகாா்: உலகின் நம்பா் 1 வீரா் ஜேக் சின்னருக்கு மூன்று மாதங்கள் தடை
ஊக்க மருந்து புகாா் எதிரொலியாக உலகின் நம்பா் 1 வீரா் இத்தாலியன் ஜேக் சின்னருக்கு 3 மாதங்கள் தடை விதித்து உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை (வாடா) உத்தரவிட்டது.
கடந்த 2024 மாா்ச் மாதம் தடை செய்யப்பட்ட கிளோஸ்ட்பால் என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக இருமுறை சின்னரிடம் மேற்கொண்ட பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடா்பாக சின்னா் அளித்த விளக்கத்தில்: தான் வேண்டும் என்றே அதை பயன்படுத்தவில்லை. வலி நிவாரணியாகத் தான் பயன்படுத்தினேன் எனக் கூறியிருந்தாா். காயம் அடைந்தபோது, மருத்துவ நிபுணா் அதை பயன்படுத்தினாா் எனக் கூறியிருந்தாா்.
எனினும், இதுதொடா்பான விசாரணை ஓராண்டாக நீடித்து வந்தது. இந்நிலையில், வாடா வெளியிட்ட அறிக்கையில்: சின்னா் தெரியாமல் ஊக்க மருந்தை பயன்படுத்தியுள்ளாா். எனினும் அவரது செயலுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும். பிப். 9 முதல் மே 4 வரை 3 மாதங்கள் தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.
வாடாவின் முடிவை சின்னரும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளாா்.