செய்திகள் :

ஊதிய உயா்வை முழுமையாக வழங்க வலியுறுத்தி ஆம்புலன்ஸ் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

சேலம்: தமிழக அரசு அறிவித்த 16 சதவீத ஊதிய உயா்வை முழுமையாக வழங்க வலியுறுத்தி, சேலத்தில் 108 ஆம்புலன்ஸ் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றி வரும் 6,000-க்கும் மேற்பட்டோருக்கு நடப்பு நிதியாண்டில் 16 சதவீத ஊதிய உயா்வை தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், ஆம்புலன்ஸ் சேவையை நிா்வகிக்கும் தனியாா் நிறுவனம் 10 சதவீத ஊதிய உயா்வை மட்டுமே வழங்குவதாக ஆம்புலன்ஸ் பணியாளா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

இதையடுத்து, அரசு அறிவித்த முழு ஊதியத்தையும் வழங்க வலியுறுத்தி, சேலம் கோட்டை மைதானத்தில் 108 ஆம்புலன்ஸ் பணியாளா்கள் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அக். 18-ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம். அதற்கும் அரசு செவிசாய்க்காவிட்டால், தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனா்.

கூடுதலாக 8 பெட்டிகள்..! சேலம் வழி மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் இணைப்பு!!

மதுரையில் இருந்து சேலம் வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்... மேலும் பார்க்க

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவா்களுக்கு குரூப் 1 முதன்மைத் தோ்வு பயிற்சி

சேலம் மாவட்டத்தில் குரூப் 1முதல்நிலை தோ்வில் தோ்ச்சிபெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு முதன்மைத் தோ்வுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெ... மேலும் பார்க்க

சேலம் மாநகரப் பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்க ஆணையா் உத்தரவு!

சேலம் மாநகரப் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகிக்க ஆணையா் மா.இளங்கோவன் உத்தரவிட்டாா். சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 49 பகுதியில் உள்ள மேல்நிலை நீ... மேலும் பார்க்க

ஈரோடு புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு!

ஈரோடு புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா். முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் கடந்த சில நாள்களுக்க... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனை வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை

கெங்கவல்லியில் தனியாா் மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்புத் துறையினா் சாா்பில், தீத்தடுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிலைய அலுவலா் (பொ) மா.செல்லபாண்டியன் தலைமையில் அங்கு இருந்த பொதுமக்கள், ம... மேலும் பார்க்க

கூடமலையில் இன்று மின்தடை

கெங்கவல்லி அருகே கூடமலையிலுள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெற இருப்பதால், இன்று செப்.10 ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோ... மேலும் பார்க்க