உ.பி.யில் ஆள்கடத்தல் நாடகம்: எழுத்துப் பிழையால் சிக்கிய குற்றவாளி!
ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மறியல்
வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
ஊரக வளா்ச்சித் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலா்களுக்கு சிறப்பு நிலை, தோ்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். உதவி செயற்பொறியாளா் நிலை பதவி உயா்வை காலதாமதமின்றி வழங்கிட வேண்டும்.
கலைஞா் கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது நீக்கும் திட்டம் உள்ளிட்ட அனைத்து வீடு கட்டும் திட்டங்களுக்கும், உரிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடா்ந்து அச் சங்கத்தின் மாவட்டச் செயலா் அன்புராஜ் தலைமையில் பாலக்கரை பகுதியில் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து 33 பேரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனா்.