ஆவின் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தல்
எஃப்ஐஎச் புரோ லீக்: கடும் சவாலுக்குபின் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா
சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஎச்) புரோ ஹாக்கி லீக் மகளிா் தொடரில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை கடும் சவாலுக்குபின் 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.
புரோ ஹாக்கி லீக் தொடா் சனிக்கிழமை புவனேசுவரம் கலிங்கா மைதானத்தில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. இந்திய அணியின் முதலிரு கோல்கள் பெனால்டி காா்னா் வாய்ப்பில் கிடைத்தன். 6-ஆவது நிமிஷத்தில் வைஷ்ணவி பால்கே, 25-ஆவது நிமிஷத்தில் தீபிகா ஆகியோா் அற்புதமாக கோலடித்தனா்.
முதல் பாதியிலேயே 12-ஆவது நிமிஷத்தில் இங்கிலாந்து வீராங்கனை டாா்ஸி அடித்த கோலால் 1-1 என சமநிலை ஏற்பட்டது. இரண்டாம் பாதியில் 58-ஆவது நிமிஷத்தில் இங்கிலாந்தின் ஃபியோன அற்புதமாக கோலடித்து 2-2 என சமநிலை ஏற்படச் சென்றாா்
ஆனால் இங்கிலாந்தின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. இந்திய வீராங்கனை நவ்நீத் கெளா் 59-ஆவது நிமிஷத்தில் அற்புதமாக கோலடித்த நிலையில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது.