செய்திகள் :

``எந்த முன் நிபந்தைனையுமின்றி உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்..." - இறங்கி வரும் ரஷ்யா?

post image

நீண்டுவரும் உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் முடிவுக்கு வரவேண்டும் என உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், ``உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உட்பட யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது" என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்திருக்கிறார். ரஷ்ய அதிபர்கள் பங்கேற்கும் வருடாந்திர குடிமக்களுடனான கேள்வி பதில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், புதின் கலந்துகொண்டு உரையாற்றினார்.

ரஷ்யா அதிபர் புதின்

அப்போது, ``அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்புடனான பேச்சுவார்த்தையில், உக்ரைன் போரில் சமரசம் செய்துகொள்ளத் தயாராக இருக்கிறோம். பல ஆண்டுகளாக ட்ரம்புடன் பேசவில்லை. ஆனால், இந்தப் போர் குறித்து விவாதிக்க அவரைச் சந்திக்க தயாராக இருக்கிறேன். பேச்சுவார்த்தைக்கு எந்த முன்நிபந்தனைகளும் இல்லை. ஆனால் ஒவ்வொரு ஒப்பந்தமும் முறையான உக்ரேனிய அதிகாரிகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உட்பட யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது. 2022 உக்ரைன் மீது படையெடுத்ததிலிருந்து நாடு வலுவாக வளர்ந்துள்ளது" என்றார்.

அதிகரிக்கும் கள்ளநோட்டுகள் புழக்கம்... திணறுகிறதா மோடி அரசு?!

நவம்பர் 8, 2016-ம் ஆண்டு இரவு 8 மணிக்குப் புழக்கத்திலிருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை உடனடியாகச் செல்லாது என அறிவித்த பிரதமர் மோடி, "பெரும் செல்வந்தர்கள் பதுக்கி வைத்திருக்கும் கணக்கில் காட்டப்படாத கற... மேலும் பார்க்க

JPC: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' - பிரியங்கா காந்தி இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் வேலை என்ன?

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியதும், அதற்குப் பெரியளவில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 269 உறுப்பினர்களும், எதிராக 196 உறுப்பினர்களும் வாக... மேலும் பார்க்க

Ambedkar: ``அம்பேத்கர் இல்லாமல் நவீன இந்தியாவை கட்டமைக்கவே முடியாது; அமித் ஷா அதை..." - பா.ரஞ்சித்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``இந்தக் காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்குப் பதிலாகக் கடவுளின் ப... மேலும் பார்க்க

`நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்?’ - முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்

கோவை திமுக முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏ-வாக இருந்தவர் மோகன். இவர் கட்சியிலும் மாவட்ட அளவில் தொடங்கி மாநில அளவில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிரு... மேலும் பார்க்க

'அடிக்கல் நாட்டு விழா, திறப்பு விழா, நலத்திட்ட வழங்குதல்' - ஸ்டாலினின் ஈரோடு விசிட் | Photo Album

முதல்வர் விசிட்முதல்வர் விசிட்முதல்வர் விசிட்முதல்வர் விசிட்முதல்வர் விசிட்முதல்வர் விசிட்முதல்வர் விசிட்முதல்வர் விசிட்முதல்வர் விசிட்முதல்வர் விசிட்முதல்வர் விசிட்முதல்வர் விசிட்முதல்வர் விசிட்முதல்... மேலும் பார்க்க