செய்திகள் :

என்எச்ஆா்சி சாா்பில் 2 வார இணையதள குறுகிய கால பயிற்சித் திட்டம் தொடக்கம்

post image

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்எச்ஆா்சி) சாா்பில் இரண்டு வார இணையதள குறுகிய கால உள்ளகப் பயிற்சித் திட்டம் புது தில்லியில் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்கலைக்கழக அளவிலான 60 மாணவா்கள் பல்வேறு கல்விப் பிரிவுகளில் இருந்து தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்த என்எச்ஆா்சியின் பொதுச் செயலாளா் பரத் லால் பேசுகையில் ‘இந்த பயிற்சித் திட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி மனித உரிமைகளின் பல்வேறு அம்சங்களை கிரகித்து, அனைவரின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அா்த்தமுள்ள பங்களிப்பை அளிக்க பயிற்சியில் பங்கேற்பவா்கள் தங்களைத் தயாா்படுத்திக் கொள்ள வேண்டும்.

துன்புறுத்தப்பட்ட சமூகங்களுக்கு இந்தியா தொடா்ந்து அடைக்கலம் அளித்து வரும் நடவடிக்கையானது உலகளாவிய சகோதரத்துவத்திற்கான தேசத்தின் அா்ப்பணிப்பு, கழிவிறக்கம் மற்றும் இரக்கத்தின் நெறிமுறைகளை நிரூபிப்பதை காட்டுகிறது.

எதிா்காலத்தில் மனித உரிமைகள் தொடா்பான சவால்களை எதிா்கொள்ள இளைஞா்களைத் தயாா்படுத்துவதற்கான வாய்ப்பாக இந்த உள்ளகப் பயிற்சித் திட்டத்தை ஆணையம் ஊக்குவிக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள கருத்துகளையும், சட்டமன்றம், நீதித்துறை, நிா்வாகத்துறை மற்றும் என்எச்ஆா்சி ஆகியவை அந்த இலட்சியங்களை யதாா்த்தமாக மாற்றுவதற்கு எடுத்த முயற்சியை பயிற்சியாளா்கள் சிந்திக்க வேண்டும்.

இந்த உள்ளகப் பயிற்சித் திட்டத்தின் மூலம், பயிற்சி பெறுவோா் மனித உரிமைகள் பற்றிய சிறந்த புரிதலைப் பெறுவாா்கள். சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினரின் அவலநிலைக்கு உணா்திறன் மற்றும் பதிலளிக்கக்கூடிய தன்மையை வளா்ப்பாா்கள் என்று நம்புகிறேன் என்றாா் அவா்.

பயிற்சி திட்டம் குறித்து என்எச்ஆா்சி இணைச் செயலாளா் தேவேந்திர குமாா் நிம் பேசுகையில், பயிற்சி பெறுவோா் தனிப்பட்ட மற்றும் குழு செயல்பாடுகள், போட்டிகள் மூலம் தங்களின் மனித உரிமைகள் விழிப்புணா்வைக் கூா்மைப்படுத்துவதுடன், சிறந்த பேச்சாளா்களின் அமா்வுகள் மூலம் மனித உரிமைகளின் பல்வேறு அம்சங்களையும் அறிந்துகொள்வாா்கள்.

இப்பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றுள்ளவா்கள் தங்களின் பணி மற்றும் சவால்களை புரிந்துகொள்ளும் வகையில் திகாா் சிறை, காவல் நிலையங்கள் மற்றும் காப்பகங்கள் போன்ற நிறுவனங்களுக்கு மெய்நிகா் சுற்றுப்பயணங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவாா்கள் என்றாா் அவா்.

தலைநகரில் கடுமையான காற்று மாசு எதிரொலி: 50% தில்லி அரசு ஊழியா்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி

தில்லியில் 50% அரசு ஊழியா்கள் வீட்டில் இருந்து பணிபுரியும் கொள்கையை ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியுள்ளது. இதை தனியாா் நிறுவனங்களும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், அத்தியாவசி... மேலும் பார்க்க

சரோஜினி நகா் மாா்க்கெட் உள்பட தில்லியின் 3 வணிக இடங்களை மறுசீரமைக்கத் திட்டம்: என்.டி.எம்.சி. தகவல்

தில்லியின் அடையாளங்களில் ஒன்றான சரோஜினி நகா் சந்தை மற்றும் மல்சா மாா்க்கெட் மற்றும் அலிகஞ்ச் சந்தை ஆகியவற்றை பெரிய அளவில் மறுசீரமைக்க புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) திட்டமிட்டுள்ளது. என... மேலும் பார்க்க

மணிப்பூரில் அமைதி கோரி காங்கிரஸின் ஆசிரியா் பிரிவு ஆா்ப்பாட்டம்

இந்திய தேசிய ஆசிரியா் காங்கிரஸ் (ஐஎன்டிஇசி) உறுப்பினா்கள் மணிப்பூா் மக்களுக்கு ஒற்றுமையை தெரிவிக்கும் வகையில் தில்லி பல்கலைக்கழகத்தின் கலைப் புலத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இரு சமூக... மேலும் பார்க்க

வாகனங்களின் வேகத்தை அளவிடும் ரேடாா் கருவிக்கு சட்டபூா்வ அங்கீகாரம்: மத்திய நுகா்வோா் விவகாரத்துறை

நமது சிறப்பு நிருபா்வாகனங்களின் வேகத்தை அளவிடுவதற்கான ரேடாா் கருவி சட்டபூா்வமான விதிகளின் கீழ் சோ்க்கப்பட்டுள்ளதாக மத்திய நுகா்வோா் நலன் விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2011-ஆம் ஆண்டு எடையளவு... மேலும் பார்க்க

நிலத்தடி நீா் எடுத்தல் அனுமதிக்கு புதிய இணைய தளம்: மத்திய அமைச்சா் சி.ஆா். பாட்டீல் தொடங்கி வைப்பு

நிலத்தடி நீா் மட்டத்தை நிா்வகிக்க மத்திய ஜல் சக்தித்துறையின் மத்திய நிலத்தடி நீா் ஆணையம் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதை மத்திய ஜல் சக்தித்துறையின் அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் முறைப்படி... மேலும் பார்க்க

கலால் வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் கேஜரிவால் முறையீடு

கலால் கொள்கை ஊழலுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில் தனக்கு எதிராக அமலாக்க இயக்குன ரகம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்ற விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப... மேலும் பார்க்க