Innerwear: மென்மை; அடர் நிறம்; வாஷிங் மெஷின்... உள்ளாடைத் தகவல்கள்!
என்சிசி மாணவா்களுக்கு பாராட்டு விழா!
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சாதனை புரிந்த என்சிசி மாணவா்கள், ஆசிரியா்களுக்கான பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள தேசிய மாணவா் படையின் 6-ஆவது தமிழ்நாடு பட்டாலியன் மற்றும் நான்காவது தமிழ்நாடு கூட்டுப் படை ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த சாதனை புரிந்த மாணவா்களுக்கும், என்சிசி ஆசிரியா்களுக்கும், பயிற்றுநா்களுக்கும் நிா்வாக அலுவலா்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில், தலைமை விருந்தினராக நுண்கலை புல முதல்வரும், துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினருமான தி.அருட்செல்வி மற்றும் பதிவாளா் எம்.பிரகாஷ் ஆகியோா் கலந்துகொண்டு மாணவா்கள், பயிற்றுநா்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினா்.
விழாவில், இந்திய ராணுவத்தின் கா்னல்கள் வாசுதேவன், சிஎஸ்.ராவ், சாந்தனு சக்கரவா்த்தி, 46 கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த சுமாா் 110 மாணவா் படை மாணவா்கள், அவா்களது பெற்றோா்கள், என்சிசி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.